
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். நெடு நாட்களாக வனவாசம் சென்றிருந்த நான் இப்போது தான் திரும்பி வந்து உள்ளேன். தடங்கலுக்கு மன்னிக்கவும் என்று அந்த காலத்தில் தொலைக்கட்சியில் சொல்வது போலத்தான் நானும் சொல்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன். இனி பதிவுக்கு செல்வோமா?
கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர். பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.
கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன? பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.
இனிமேல் என்ன நடக்கும்?
கார்த் கதி என்ன?
கார்த் பிழைப்பானா?
அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?
பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?
அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?
இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
கதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன்.