Showing posts with label Coming Soon. Show all posts
Showing posts with label Coming Soon. Show all posts

Sunday, November 14, 2010

கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் - பஸ் சாயர் - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. தீபாவளியை கூட தொடர்ந்து குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இருக்கிறேன். விடுங்கள், என்னுடைய சொந்தக்கதை, சோகக்கதை உங்களுக்கு எதற்கு? நம்முடைய அடுத்த பதிவிற்கு செல்வோம். ஆம், நெடுநாள் கழித்து இன்றுதான் நிறைய நேரம் கிடைத்தது. ஆகையால் இரண்டு, மூன்று இந்திரஜால் காமிக்ஸ்'களை இன்று ஸ்கான் செய்துவிடுவது என்று முடிவெடுத்தான். அதன் முதல் கட்டமாக இதோ இந்த முன்னோட்ட பதிவு:

ஏற்கனவே நம்முடைய பதிவில் காமிக்ஸ் வீரர் பஸ் சாயரின் (முத்து காமிக்ஸ் சார்லி) கதைகளை படித்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதிய வாசகர்களுக்கு அவரின் கதைகளுக்கான லின்க்குகள் இதோ:

1. அறுந்த நரம்புகள் - புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி)

2. ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்

இந்த அட்டைப்படம்தான் அடுத்து வரப்போகும் நம்முடைய பதிவின் காமிக்ஸ்:

கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் No 54 - பஸ் சாயர்  - அட்டைப்படம்

IJC #54 Cover

எனக்கு நகைச்சுவை நதிகளில் ஜோடியாக வந்து கலக்கும் கவுண்டமணி-செந்தில் ஜோடி மிகவும் பிடிக்கும் (நம்ம பயங்கரவாதி டாக்டர் செவன் போல). இந்த அக்பர் பீர்பால் அக்தையில் வரும் சம்பவமானது ஒரு கவுண்டமணி செந்தில் காமெடி சீனில் வரும். கவுண்டரும் அவரது மனைவியும் ஓய்வு எடுக்கும்போது செந்தில் வெளியில் மாட்டை காவல் காத்திருப்பார், அவர் செந்திலின் புத்திகூர்மையை என்னை வியந்துகொண்டிருக்கும்போது செந்தில் பல கேள்விகளை கேட்பார். அவரது அறிவு கூர்மையை எண்ணி கவுண்டர் வியந்துக்கொண்டிருக்கும்போது செந்தில் தான் இருக்கும்போதே மாடு திருடு போனதை எண்ணி வியப்பார். பின்னர் என்ன? வழக்கம் போல கவுண்டர் உதைப்பார். செந்தில் வாங்குவார்.

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - நட்சத்திர நகைச்சுவை: அக்பர் பீர்பால்

IJC #54 Birbal 01
IJC #54 Birbal 02
IJC #54 Birbal 03
IJC #54 Birbal 04
IJC #54 Birbal 05

நம்முடைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் இதழ்களில் வரும் பில்லர் கதைகள் நம்மை மிகவும் கவர்ந்தவை. ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவுமே வருவதில்லை. ஆசிரியர் இதனை கவனிக்க வேண்டும். இதோ இந்திரஜால் காமிக்ஸில் வந்த இரண்டு பில்லர்கள்:

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - மணியன் - சுட்டிப்பைய்யன்

IJC #54 Manian

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - ஹீத்கிளிப் - சொல்வதற்கு ஒன்றுமில்லை

IJC #54 Heath Cliff

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் இந்த காமிக்ஸ் வந்ததால் வர்த்தக விஷயத்தில் அவர்கள் எப்போதுமே குறை போனதில்லை. ஆகையால் எப்போதுமே இரண்டு மூன்று விளம்பரங்கள் இருக்கும். நம்முடைய ராணி காமிக்ஸில் கூட சில பல விளம்பரங்கள் இருக்கும். அந்த காமிக்ஸ் தினத்தந்தி குழுமத்தில் இருந்து வந்ததால் இப்படி ஒரு வசதி. ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸில் மட்டும் இதுவரை விளம்பரங்களே வந்ததில்லை (ஓரிரு விளம்பரங்களை தவிர).

IJC #54 Ad 1 IJC #54 Ad 2 IJC #54 Ad 3

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று) முழு பதிவுடன் வருகிறேன் - இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி, 
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்

Friday, July 31, 2009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இதோ என்னுடைய அடுத்த முன்னோட்ட பதிவு ரெடி. இந்த முறை சற்று வித்தியாசமாக கதையையும் டீசர் போல அளித்து இருக்கிறேன். எப்படி என்பதை உங்களின் கருத்துக்கள் மூலமே அறிய வேண்டும்.

நம்முடைய அடுத்த காமிக்ஸ் பதிவின் ஹீரோ சற்று வித்தியாசமானவர். இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது, இந்த ஹீரோவின் ஆரம்ப கால கதைகளுக்கு தான். பின்னாளில் வந்த மொக்கை ராணி காமிக்ஸ் கதைகளுக்கோ அல்லது நாம் பதிவ்டப் போகும் சற்று சுமாரான இந்திரஜால் கதைகளுக்கோ ரசிகர்கள் குறைவுதான்.

உதாரணமாக ஆரம்ப கால புளுபெர்ரி (கேப்டன் டைகர்) கதைகள் அருமையாக இருக்கும். தற்போது வந்து கொண்டு இருக்கும் கதைகள் அமெரிக்க பாணி மொக்கை கதைகளே. அதனால் இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும். இதோ கதையின் முன்னோட்டம்:

கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் (நம்முடைய சாத்தான் அல்ல) அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர்.

Teaser 1

பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.

Teaser 2

கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன?

Teaser 3

பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.

Teaser 4

இனிமேல் என்ன நடக்கும்?

கார்த் கதி என்ன?

கார்த் பிழைப்பானா?

அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண நம்முடைய அடுத்த பதிவை பாருங்கள். இப்போது பல்சுவை பகுதியாக சில பல ஒரு பக்க / இரு பக்க கதைகளும், பக்க நிரப்பிகளும் உங்களின் பார்வைக்கு.

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 1

birbal 1

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 2

birbal 2

ரங்கு - ஒரு பக்க கதை - ஓவியர் ஸெஹாப் கைவண்ணத்தில்-அற்புத ஓவியரின் கைவண்ணம்

rangu

ஒரு பக்க நிரப்பி - ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

67 Ripley

ஒரு பக்க நிரப்பி - சொல்வதற்கு ஒன்றுமில்லை - ஹீத் கிளிப்

67 sa

ஒரு பக்க நிரப்பி - மணியன் - ஹென்றி

67 henri

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Saturday, May 30, 2009

வேதாளர் - வைரத்தின் நிழல் : முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தவிர்க்க இயலாத சில நிர்பந்தங்களால் என்னால் கடந்த ஒரு மாதமாக பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும்.
அந்த குறையை போக்க இதோ அடுத்து வரப் போகும் கதைக்கான ஒரு முன்னோட்டமும், வழமையாக நான் ஸ்கான் செய்யாத சில பல்சுவை பகுதிகளும் இந்த பதிவில் இடம் பெற்றுள்ளன. இந்த மாதிரியை தொடரலாமா என்பதை ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
நம்மில் பலருக்கு அக்பர்-பீர்பால் கதைகளை பிடிக்கும். (எனக்கு இன்ஸ்பெக்டர் ஈகிள் கதையில் வரும் பல்பீர் பெயரை ஈகிள் வேண்டுமென்றே தவறாக பீர்பால் என்று கூறி அவரை சீண்டும் கட்டங்கள் மிகவும் பிடிக்கும்). அதனால் இதோ ஒரு கிளாசிக் அக்பர்-பீர்பால் கதை.
 
பெரும்பாலும் இது போன்ற கதைகளை நம்மில் பலருக்கு சிறு வயதில் பிடித்து இருக்கும். இதனைப் போன்றே எனக்கு பிடித்த மற்றுமொரு சிறுகதை வரிசை நசீருத்தின் ஹோட்ஜா. பூந்தளிர் இதழில் நான் முதலில் தேடுவது இதைத்தான் (காக்கை காளியும், சுட்டிக் குரங்கு கபீசும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்டிரியோடைப்பிங் ஆகி விட்டது). ஆனால் அக்பர்-பீர்பால் கதைகள் என்றும் படிக்க இனியவை என்பது எனது கருத்து.
 

அக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 1

B1

அக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 2

B2

 

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற இந்த வரிசையை நான் ஆரம்பத்தில் இருந்தே ரசித்தேன்.அதற்கு காரணம் ஆரம்ப கால முத்து காமிக்ஸில் இதனைப் போலவே நம்பினால் நம்புங்கள் என்று ஒரு பகுதி வந்து என்னை அசத்தும். அதுவும் முல்லை தங்கராசன் அவர்கள் ஒவ்வொரு புதிர் போன்ற கேள்வியை வெளியிட்டு விட்டு அந்த செய்தி ஆம், இல்லை என்று இரண்டு விடைகளை அளித்து இருப்பார். புத்தகத்தின் கடைசீ பக்கத்தில் விடை இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் விடை இருந்த பக்கம் கிழிந்து விட்டதால் மனிதனை கொல்லும் சுறாக்கள் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் வேறு ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

ripley

நண்பர் விஸ்வா அவர்கள் காமிக்ஸ் கதைகளில் வந்த விளம்பரங்களை பற்றி பதிவிட்டு நம்மில் பலரையும் விளம்பரங்களை பற்றியும் யோசிக்க வைத்து விட்டார். இதோ இந்த இதழில் வந்த ஏழு விளம்பரங்களில் எனக்கு பிடித்த ஒன்று. பின்னர் இந்த கருத்தை மையமாக கொண்டே அனு கழகம் என்று ஒரு தொடர் பூந்தளிர் இதழில் ஆரம்பிக்கப் பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

LIC AD

இதோ ரங்கு என்று ஒரு "ஒரு பக்க தொடர்". இந்த ஓவியர் செஹாப் தான் வழமையாக அந்த காலகட்டங்களில் இந்திரஜால் இதழின் அட்டைப் படங்களை வரைவார். சில நேரங்களில் அக்பர் பீர்பால் கதைகளுக்கும் இவர் வரைவார். நன்றாக இருக்கும்.

Rangu

இதோ அடுத்து இடப் போகும் புத்தகத்தின் அட்டைப் படம்:

00

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin