Thursday, April 21, 2011

வாண்டுமாமா அவர்களின் பின் நவீனத்துவ சிறுகதை - நூறு கண் ராட்சதன்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இன்று என்னுடைய சிறுவயது விளையாட்டு தோழன், எனக்கு தனிமையின் பயம் தோன்றும்போதெல்லாம் எனக்கு தைரியமூட்டிய ஒரு தேவதன் (தேவதையின் ஆண்பால் இதுதானே?) திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள். இந்த விஷயம் மிகவும் தாமதமாக தெரிந்த காரணத்தினால் ஒரு சிறிய பதிவினை இப்போது இங்கே வழங்கப்ப்போகிறேன் (ஹுக்கும், முன்கூட்டியே தெரிந்தால் மட்டும் பல பதிவுகள் இட்டுவிடுவீரோ? என்று நீங்கள் முனகுவது எனக்கும் கேட்கிறது). மன்னிக்கவும்.

வாண்டுமாமா அவர்களை பற்றி சொல்ல நான் யார்? அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கு பல்லாயிரக்கணக்கான (தொலைந்து போன) சிறார்களில் நானும் ஒருவன். என்னுடைய சிறு வயது நினைவுகள் ஒரு கலைந்த கனவாக மாத்திரமே காட்சியளிக்கும் இந்த ஒரு அசாதாரண வாழ்வில், இப்போதும் அப்போதும் என்று பல பஞ்சுமிட்டாய் தருணங்களை அளித்தவர்தான் வாண்டுமாமா. இன்றைக்கும் பலே பாலுதான் எனக்கு பிடித்த கதை, (எனக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு சாரு என்றுதான் பெயரிடுவேன்), வீர விஜயன் தான் என்னுடைய சிறு வயது நாயகன். இந்த அருமையான தருணங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்  ஐயா.

இன்றைய இணையதள பிளாக்கர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று இனம்காட்டிக்கொள்ள திடீரென்று ஏழெட்டு நாவல்களை எழுதுவது, தன்னுடைய எதிரியை திட்டுவதற்கென்றே தன்னுடைய இணையதள பக்கங்களை உபயோகப்படுத்துவது என்று தங்களின் மற்றும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் அப்பாவி மக்களின் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் வேளையில் ஒரு சிறுகதை என்றால் என்ன, அது எப்படி பின் நவீனத்துவ சிறுகதையாக மாறுகிறது என்பதற்கு இந்த ஆறுபக்க கதையே சிறந்த உதாரணம். முடிந்தால் இதுபோல எழுதப் பாருங்கள்.

ஒரு நாயகனை எதிர்நாயகனாக காட்டுவதும், எதிர் நாயகன் ஒருவனை நாயகனாக காட்டுவதும் ஒரு திறந்த கதை சொல்லிக்கு மட்டுமே சாத்தியம். அடுத்து வரும் கதையை கூர்ந்து படிக்கவும். படித்து முடித்தவுடன் இரண்டாவது முறை படியுங்கள். அப்படி இரண்டாவது முறை படிக்கும்போது கடைசி ஐந்து பத்திகளை களைந்துவிட்டு படியுங்கள் -  கதையின் போக்கே வித்தியாசமாகவும், நாயகன் எதிர்நாயகனாகவும், எதிர் நாயகன் நாயகனாகவும் தெரியும். இந்த யுத்தி ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு மாத்திரமே வாய்க்கும். நிதானமாக படிக்க ஆரம்பியுங்கள்.

 

NKR 01
NKR 02
NKR 03
NKR 04
NKR 05
NKR 06

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்- முழு பதிவுடன் வருகிறேன்.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,  
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Thursday, March 24, 2011

குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். உலக கிண்ண ஆட்டங்களை கண்டு கழித்துக்கொண்டு இருப்பதால் பதிவுகளை இடுவதோ, பதிவுகளில் கமன்ட் இடுவதோ சாத்தியமில்லாமல் போய் விட்டது. அதுவுமில்லாமல் பைனல்ஸ் வேறு எங்கள் ஊரில் நடப்பதால் டிக்கெட் வாங்குவதற்குள் பெரும்பாடாகி விட்டது. ஆனாலும் சளைக்காமல் எங்களது அலுவலக மார்க்கெட்டிங் பிரிவு தலைவரை சதாய்த்து ஒரு வழியாக மூன்று டிக்கெட்டுகளை வாங்கிவிட்டேன். ஆகையால் பைனல்ஸ் நடக்கும்போது பச்சை வண்ண டி ஷர்ட்டில் (லக்கி லுக் படம் போட்டது) என்னை பார்க்க முடிந்தால் பாருங்கள்.

கொஞ்சம் இருங்க பாஸ். இப்போதான் ரிக்கி பாண்டிங் செஞ்சுரி அடிச்சு இருக்காரு, போற போக்க பார்த்தா, நான் டிக்கெட் வாங்கியதே வேஸ்ட் என்றே தோன்றுகிறது. மூன்று Mகளை கடந்து இந்தியா வராதோ என்றே சிந்திக்க வைக்கிறது (Motera – Q.F, Mohali – S.F & Mumbai – Final). இந்திய அணி உலக கிண்ண போட்டியின் பைனல்ஸ் வரை வராதோ என்ற எண்ணம் வரத்துவங்கியது.

சரி விடுங்க, பாண்டிங் மட்டுமா செஞ்சுரி அடிப்பாரு? ஏன், நம்ம ஆளுங்க அடிக்க மாட்டாங்களா என்ன? அடிக்குறாங்க. அதுக்குள்ளாக என்னோட நண்பர் ஒருவர் ஒரு மேட்டரை சொன்னார். இந்தியா பேட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி நீ ஒரு காமிக்ஸ் பதிவை போட்டால் இந்தியா ஜெயிக்கும் என்று. இது என்னடா கொடுமை என்று என்னிடம் இருந்த புத்தகங்களில் இருப்பதிலேயே எது மிகவும் குறைந்த பக்கங்களை கொண்ட காமிக்ஸ் கதை என்று பார்த்து ஸ்கான் செய்து பதிவிடுவது என்று முடிவெடுத்தேன். அதன் விளைவே இந்த தேவியின் கண்மணி மாத இதழில் வந்த இந்த காமிக்ஸ் சிறுகதை.

செல்லம் அவர்கள் 1950’s முதலே படம் வரைந்து கொண்டு இருக்கிறார். அவரது ஓவியங்கள் தான் தமிழ் காமிக்ஸ் வரலாற்றின் முக்கிய சுவடுகள். அந்த ஓவியர் வெகு சமீபத்தில் வரைந்த ஓவியங்கள் இவை. 2004ம் ஆண்டிற்கு பிறகு அவர் ஓவியங்கள் வரைவதை நிறுத்தி விட்டார். ஆகையால் Literally இவையே பதிப்பில் வந்த அவரது காமிக்ஸ் கதையாக இருக்கக்கூடும்.

காலம் தன்னுடய விளையாட்டை ஓவியர் செல்லம் அவர்களின் ஓவியதிறனில் காட்டி இருந்தாலும் ஒரு திறமையான கலைஞன் எப்போதுமே டச் மட்டுமே இழப்பான் (வயதாவதால்) ஆனால் அந்த கிளாஸ் அப்படியே இருக்கும் என்பதை இந்த ஓவியங்களின் மூலம் அறியலாம். குறிப்பாக அந்த கதையில் வரும் சீடர்களின் முக பாவனைகளை காணுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதிரி வரைவதற்கு வேறு யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 1
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 1
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 2
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 2
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 3
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 3
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 4
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 4
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 5
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 5
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 6
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work Small Comics Page 4 copy

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி) முழு பதிவுடன் வருகிறேன்.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,  
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Saturday, January 1, 2011

ரத்னா காமிக்ஸ் - டார்ஜான் சாகசம் - விபரீத மனிதன் - எடிட்டர்: முல்லையார்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். இன்றைய தினம் ஆங்கில புத்தாண்டு தினமாகும். தமிழ் புத்தாண்டு என்று என்பதே ஒரு சரியான முடிவில்லாமல் இருக்கும் ஒரு சூழலில் நாம் ஆங்கில புத்தாண்டை தான் விமரிசையாக கொண்டாட வேண்டி இருக்கும். வேறு வழி இல்லை. இந்த சூழலில் நம் அனைவருக்கும் ஒரு காண்பதற்கு அறிய ஒரு காமிக்ஸ் கதையை பரிசாக அளிக்கலாம் என்று நினைத்ததாலேயே இந்த பதிவு இடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நம்முடைய காமிக்ஸ் உலக அருமை நண்பர் (முல்லையாரின் மாபெரும் ரசிகர்) திரு ஹாஜா இஸ்மாயில் அவர்கள் ரத்னா காமிக்ஸ் பற்றிய அருமையான பதிவொன்றை இட்டார் (அந்த பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்: HAJA TALKS). அந்த பதிவை படித்தவுடன் எனக்கும் அந்த ரத்னா காமிக்ஸ் பற்றிய பதிவொன்றை இடவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவே இந்த பதிவு.

காமிக்ஸ் உலக நண்பர்களே, கிடைத்தற்கு அறிய இந்த ரத்னா காமிக்ஸ் பற்றிய உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து இந்திரஜால் காமிக்ஸ் மற்றும் வித்யார்த்தி மித்திரன் போன்ற காமிக்ஸ்களுடன் இந்த ரத்னா காமிக்ஸ் பற்றிய பதிவினையும் இடலாமா என்பது உங்களின் எண்ணங்களின் மூலம் பின்னூட்டம் வழியாக தெரியப்படுத்துங்கள்.

முதலில் இந்த இதழின் அட்டைப்படமும் அதன் ஆங்கில மூல அட்டைப்படமும்: இவை இரண்டுமே இணைய தளங்களில் இருந்தே எடுக்கப்பட்டவை. இதனை ஒரிஜினலாக வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் அதனை இணையத்தில் வெளியிட்ட நண்பர்கள் ஹாஜா மற்றும் பிரபாத் ஆகிய இருவருக்கும் நன்றி.

Vibareetha Manithan English Original The Mad Professor

இனிமேல் இந்த கதையை படிக்க செல்லலாம். இந்த கதையும் ஒரு வழக்கமான டெம்பிளேட் கதை தான். அடர்ந்த காடு, ஒரு பயங்கர புரபெசர், அவருக்கு உலகை ஆளும் ஒரு வெறி, அதற்க்கு அவரின் ஆயுதம் ஒரு வித வசிய மருந்து, அவருக்கு ஒரு நல்ல உள்ளம் கொண்ட மகள், படிப்பறிவற்ற-யோசிக்கும் திறன் இல்லாத காட்டுவாசி மக்கள், புத்திசாலியான வெள்ளையர்கள், பின்னர் நல்லவன் வெல்வான் என்ற வழக்கமான கதைதான்.

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 01

01

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 02

02

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 03

03

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 04

04

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 05

05

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 06

06

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 07

07

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 08

08

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 09

09

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 10

10

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 11

11

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 12

12

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 13

13

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 14

14

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 15

15

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 16

16

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 17

17

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 18

18

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 19

19

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 20

20

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 21

21

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 22

22

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 23

23

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 24

24

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 25

25

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 26

26

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 27

27

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 28

28

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 29

29

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 30

30

இந்த இதழின் ஒரு பக்கம் முழுமையாக படிக்கவும், பார்க்கவும் முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகி விட்டது. அதனால் அந்த பக்கத்தை வெளியிட இயலவில்லை. அதன் பின் பக்கத்தை ஓரளவுக்கு தேற்றி, இதோ சுமாரான அளவில் ஸ்கான் செய்து விட்டேன்.

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன் - டார்ஜான் சாகசம் - முல்லை தங்கராசனின் சித்திரக்கதை - பக்கம் 32

32

இந்த கதை முதலில் இரு வண்ணங்களில் வந்தது தமிழில் தான். பின்னரே இது இரு வண்ணங்களில் ஆங்கிலத்தில் வந்தது. இதன் ஒரு பக்கம் உங்களின் ஒப்பீட்டிற்கு.

டார்ஜான் - தி மேட் புரபெசர் - பக்கம் 04

ரத்னா காமிக்ஸ் - இதழ் எண் 02: விபரீத மனிதன்-பக்கம் 04

Sample 04

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி) முழு பதிவுடன் வருகிறேன் - இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,  
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin