Saturday, May 30, 2009

வேதாளர் - வைரத்தின் நிழல் : முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தவிர்க்க இயலாத சில நிர்பந்தங்களால் என்னால் கடந்த ஒரு மாதமாக பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும்.
அந்த குறையை போக்க இதோ அடுத்து வரப் போகும் கதைக்கான ஒரு முன்னோட்டமும், வழமையாக நான் ஸ்கான் செய்யாத சில பல்சுவை பகுதிகளும் இந்த பதிவில் இடம் பெற்றுள்ளன. இந்த மாதிரியை தொடரலாமா என்பதை ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
நம்மில் பலருக்கு அக்பர்-பீர்பால் கதைகளை பிடிக்கும். (எனக்கு இன்ஸ்பெக்டர் ஈகிள் கதையில் வரும் பல்பீர் பெயரை ஈகிள் வேண்டுமென்றே தவறாக பீர்பால் என்று கூறி அவரை சீண்டும் கட்டங்கள் மிகவும் பிடிக்கும்). அதனால் இதோ ஒரு கிளாசிக் அக்பர்-பீர்பால் கதை.
 
பெரும்பாலும் இது போன்ற கதைகளை நம்மில் பலருக்கு சிறு வயதில் பிடித்து இருக்கும். இதனைப் போன்றே எனக்கு பிடித்த மற்றுமொரு சிறுகதை வரிசை நசீருத்தின் ஹோட்ஜா. பூந்தளிர் இதழில் நான் முதலில் தேடுவது இதைத்தான் (காக்கை காளியும், சுட்டிக் குரங்கு கபீசும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்டிரியோடைப்பிங் ஆகி விட்டது). ஆனால் அக்பர்-பீர்பால் கதைகள் என்றும் படிக்க இனியவை என்பது எனது கருத்து.
 

அக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 1

B1

அக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 2

B2

 

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற இந்த வரிசையை நான் ஆரம்பத்தில் இருந்தே ரசித்தேன்.அதற்கு காரணம் ஆரம்ப கால முத்து காமிக்ஸில் இதனைப் போலவே நம்பினால் நம்புங்கள் என்று ஒரு பகுதி வந்து என்னை அசத்தும். அதுவும் முல்லை தங்கராசன் அவர்கள் ஒவ்வொரு புதிர் போன்ற கேள்வியை வெளியிட்டு விட்டு அந்த செய்தி ஆம், இல்லை என்று இரண்டு விடைகளை அளித்து இருப்பார். புத்தகத்தின் கடைசீ பக்கத்தில் விடை இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் விடை இருந்த பக்கம் கிழிந்து விட்டதால் மனிதனை கொல்லும் சுறாக்கள் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் வேறு ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

ripley

நண்பர் விஸ்வா அவர்கள் காமிக்ஸ் கதைகளில் வந்த விளம்பரங்களை பற்றி பதிவிட்டு நம்மில் பலரையும் விளம்பரங்களை பற்றியும் யோசிக்க வைத்து விட்டார். இதோ இந்த இதழில் வந்த ஏழு விளம்பரங்களில் எனக்கு பிடித்த ஒன்று. பின்னர் இந்த கருத்தை மையமாக கொண்டே அனு கழகம் என்று ஒரு தொடர் பூந்தளிர் இதழில் ஆரம்பிக்கப் பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

LIC AD

இதோ ரங்கு என்று ஒரு "ஒரு பக்க தொடர்". இந்த ஓவியர் செஹாப் தான் வழமையாக அந்த காலகட்டங்களில் இந்திரஜால் இதழின் அட்டைப் படங்களை வரைவார். சில நேரங்களில் அக்பர் பீர்பால் கதைகளுக்கும் இவர் வரைவார். நன்றாக இருக்கும்.

Rangu

இதோ அடுத்து இடப் போகும் புத்தகத்தின் அட்டைப் படம்:

00

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Sunday, May 3, 2009

வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.இரண்டு வாரங்களுக்கு ஒரு பதிவு என்ற என்னுடைய கொள்கைக்கு ஏற்ப இதோ அடுத்த பதிவு. இந்த பதிவில் ஒரு வித்தியாசமும் உள்ளது. அது என்ன என்பதை முடிவில் கண்டு கொள்ளுங்கள்.

காடு சம்பந்தப் பட்ட அருமையான பதிவை திரு கனவுகளின் காதலன் இங்கு இட்டுள்ளதால் நானும் இந்திரஜால் காமிக்ஸ் பற்றிய பதிவை இடும் என்னத்தை மாற்றிக் கொண்டு சென்ற மாதம் பதிவிட்ட வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றியே இந்த பதிவும் இட்டு உள்ளேன். வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள எங்கள் தலைவர் திரு முத்து விசிறி அவர்களின் பதிவுக்கான சுட்டி இதோ: முத்து விசிறி

வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் இரண்டு வரிசையில் வந்தது. ஒன்று மாயாவி மற்றது டார்ஜான். மாயாவி கதைகள் வெறும் கருப்பு வெள்ளையில் வந்தது. விலை ஒரு ருபாய் ஐம்பது காசுகள். வெளி வந்த ஆண்டு 1972 முதல் 1975 வரை. ஆனால் டார்ஜான் கதைகளோ இரு வண்ணத்தில் அதே விலையில் வந்தது.

என்னிடம் இருக்கும் இந்த டார்ஜான் புத்தகத்தில் இரண்டு டார்ஜான் கதைகள் இருக்கின்றன. முதல் கதை இந்த பதிவில் ஏற்கனவே இடப் பட்டதால் அடுத்து மீதம் உள்ள இரண்டாவது கதை இதோ:

 

வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் &  அரேபிய கில்லாடிகள் : அட்டை
Cover
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 1
01
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 2
02
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 3
03
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 4
04
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 5
05
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 6
06
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 7
07
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 8
08
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 9
09
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 10
10
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 11
11
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 12
12
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 13
13
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 14
14
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 15
15
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - அரேபிய கில்லாடிகள் – பக்கம்: 16
16
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் &  அரேபிய கில்லாடிகள் : பின் அட்டை
Untitled-33

முன்பு பதிவில் சொல்லி இருந்த படி இந்த பதிவில் வித்தியாசமான் ஒன்று என்னவெனில் இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பும் இங்கேயே கிடைக்கும் என்பதுதான். ஒவ்வொரு ஸ்கானையும் கிளிக் செய்தால் படம் பெரிதாகும்.

Untitled-01 Untitled-02 Untitled-03 Untitled-04
Untitled-05 Untitled-06 Untitled-07 Untitled-08
Untitled-09 Untitled-10 Untitled-11 Untitled-12
Untitled-13 Untitled-14 Untitled-15 Untitled-16
Untitled-17 Untitled-18 Untitled-19 Untitled-20
Untitled-21 Untitled-22 Untitled-23 Untitled-24
Untitled-25 Untitled-26 Untitled-27 Untitled-28
Untitled-29 Untitled-30 Untitled-31 Untitled-32

இந்த கதையை தமிழாக்கம் செய்தவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: ஐயா, தங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவரை நான் சந்திக்க வேண்டும்.Pirates என்றால் கில்லாடிகள் என்று உங்களுக்கு எந்த பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்? 

ஆங்கில புத்தகத்திற்கும் தமிழ் புத்தகத்திற்கும் உள்ள விலை மற்றும் வண்ண வேறுபாடுகளை கவனியுங்கள். 

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin