Friday, July 31, 2009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இதோ என்னுடைய அடுத்த முன்னோட்ட பதிவு ரெடி. இந்த முறை சற்று வித்தியாசமாக கதையையும் டீசர் போல அளித்து இருக்கிறேன். எப்படி என்பதை உங்களின் கருத்துக்கள் மூலமே அறிய வேண்டும்.

நம்முடைய அடுத்த காமிக்ஸ் பதிவின் ஹீரோ சற்று வித்தியாசமானவர். இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது, இந்த ஹீரோவின் ஆரம்ப கால கதைகளுக்கு தான். பின்னாளில் வந்த மொக்கை ராணி காமிக்ஸ் கதைகளுக்கோ அல்லது நாம் பதிவ்டப் போகும் சற்று சுமாரான இந்திரஜால் கதைகளுக்கோ ரசிகர்கள் குறைவுதான்.

உதாரணமாக ஆரம்ப கால புளுபெர்ரி (கேப்டன் டைகர்) கதைகள் அருமையாக இருக்கும். தற்போது வந்து கொண்டு இருக்கும் கதைகள் அமெரிக்க பாணி மொக்கை கதைகளே. அதனால் இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும். இதோ கதையின் முன்னோட்டம்:

கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் (நம்முடைய சாத்தான் அல்ல) அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர்.

Teaser 1

பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.

Teaser 2

கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன?

Teaser 3

பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.

Teaser 4

இனிமேல் என்ன நடக்கும்?

கார்த் கதி என்ன?

கார்த் பிழைப்பானா?

அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண நம்முடைய அடுத்த பதிவை பாருங்கள். இப்போது பல்சுவை பகுதியாக சில பல ஒரு பக்க / இரு பக்க கதைகளும், பக்க நிரப்பிகளும் உங்களின் பார்வைக்கு.

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 1

birbal 1

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 2

birbal 2

ரங்கு - ஒரு பக்க கதை - ஓவியர் ஸெஹாப் கைவண்ணத்தில்-அற்புத ஓவியரின் கைவண்ணம்

rangu

ஒரு பக்க நிரப்பி - ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

67 Ripley

ஒரு பக்க நிரப்பி - சொல்வதற்கு ஒன்றுமில்லை - ஹீத் கிளிப்

67 sa

ஒரு பக்க நிரப்பி - மணியன் - ஹென்றி

67 henri

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin