நண்பர்கள் அனைவரும் காமிக்ஸ் பற்றி எழுதி என்னுடைய ஆர்வத்தையும் தூண்டி விட்டு விட்டார்கள். நானும் என்னுடைய நீண்ட நாள் பேவரிட் ஆன இந்திரஜால் காமிக்ஸ் பற்றி ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இதனை ஆரம்பித்துள்ளேன். ஆதரவு தருவீர்கள் என்றே நம்புகிறேன்.
என்னிடம் மொத்தம் நூற்றி ஐம்பது இந்திரஜால் காமிக்ஸ் (தமிழ்) உள்ளது. அவற்றை எல்லாம் ஸ்கான் செய்து இங்கே வெளியிடலாம் என்பதே என் எண்ணம். ஆங்கிலத்தில் பல இந்திரஜால் காமிக்ஸ் தளங்கள் இருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை. அந்த குறையை நீக்கவே இந்த முயற்சி.
சிலர் இந்திரஜால் காமிக்ஸ் தமிழாக்கம் பற்றி குறை கூறலாம். ஆனாலும் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய தவறு தெரியவில்லை. நான் மும்பை'யிலேயே பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இந்த கதை ஏற்கனவே ராணி காமிக்ஸ் இதழில் வந்து உள்ளது.
இந்த டவுன்லோட் எனக்கு த காமிக்ஸ் புராஜெக்ட் என்ற வலைதளத்தில் இருந்து கிடைத்தது. அடுத்த பதிவு முதல் என்னுடைய ஸ்கான்'களை வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன்.
என்னடா, முதல் கதையையே இப்படி ஒரு (சரி, சொல்லி விடலாம்) மொக்கை கதையாக பதிவு இடுகிறோமே என்று நினைக்க வேண்டாம். ஆனாலும் இதில் ஒரு செண்டிமென்ட் உள்ளது. நான் முதலில் தமிழில் படித்த பேன்டம் (வேதாளர் = மாயாவி) கதை இது தான். ராணி காமிக்ஸ் இதழில் இது இரண்டாவது மாயாவி கதை என்று நினைக்கிறேன் (முதல் கதை ரகசிய போலிஸ் 000). அதனால் தான் இந்த கதையை முதன் முதலில் பதிவிடுகிறேன். மன்னிக்கவும்.
கதையின் பக்கங்கள் இதோ:
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.