Thursday, March 24, 2011

குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். உலக கிண்ண ஆட்டங்களை கண்டு கழித்துக்கொண்டு இருப்பதால் பதிவுகளை இடுவதோ, பதிவுகளில் கமன்ட் இடுவதோ சாத்தியமில்லாமல் போய் விட்டது. அதுவுமில்லாமல் பைனல்ஸ் வேறு எங்கள் ஊரில் நடப்பதால் டிக்கெட் வாங்குவதற்குள் பெரும்பாடாகி விட்டது. ஆனாலும் சளைக்காமல் எங்களது அலுவலக மார்க்கெட்டிங் பிரிவு தலைவரை சதாய்த்து ஒரு வழியாக மூன்று டிக்கெட்டுகளை வாங்கிவிட்டேன். ஆகையால் பைனல்ஸ் நடக்கும்போது பச்சை வண்ண டி ஷர்ட்டில் (லக்கி லுக் படம் போட்டது) என்னை பார்க்க முடிந்தால் பாருங்கள்.

கொஞ்சம் இருங்க பாஸ். இப்போதான் ரிக்கி பாண்டிங் செஞ்சுரி அடிச்சு இருக்காரு, போற போக்க பார்த்தா, நான் டிக்கெட் வாங்கியதே வேஸ்ட் என்றே தோன்றுகிறது. மூன்று Mகளை கடந்து இந்தியா வராதோ என்றே சிந்திக்க வைக்கிறது (Motera – Q.F, Mohali – S.F & Mumbai – Final). இந்திய அணி உலக கிண்ண போட்டியின் பைனல்ஸ் வரை வராதோ என்ற எண்ணம் வரத்துவங்கியது.

சரி விடுங்க, பாண்டிங் மட்டுமா செஞ்சுரி அடிப்பாரு? ஏன், நம்ம ஆளுங்க அடிக்க மாட்டாங்களா என்ன? அடிக்குறாங்க. அதுக்குள்ளாக என்னோட நண்பர் ஒருவர் ஒரு மேட்டரை சொன்னார். இந்தியா பேட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி நீ ஒரு காமிக்ஸ் பதிவை போட்டால் இந்தியா ஜெயிக்கும் என்று. இது என்னடா கொடுமை என்று என்னிடம் இருந்த புத்தகங்களில் இருப்பதிலேயே எது மிகவும் குறைந்த பக்கங்களை கொண்ட காமிக்ஸ் கதை என்று பார்த்து ஸ்கான் செய்து பதிவிடுவது என்று முடிவெடுத்தேன். அதன் விளைவே இந்த தேவியின் கண்மணி மாத இதழில் வந்த இந்த காமிக்ஸ் சிறுகதை.

செல்லம் அவர்கள் 1950’s முதலே படம் வரைந்து கொண்டு இருக்கிறார். அவரது ஓவியங்கள் தான் தமிழ் காமிக்ஸ் வரலாற்றின் முக்கிய சுவடுகள். அந்த ஓவியர் வெகு சமீபத்தில் வரைந்த ஓவியங்கள் இவை. 2004ம் ஆண்டிற்கு பிறகு அவர் ஓவியங்கள் வரைவதை நிறுத்தி விட்டார். ஆகையால் Literally இவையே பதிப்பில் வந்த அவரது காமிக்ஸ் கதையாக இருக்கக்கூடும்.

காலம் தன்னுடய விளையாட்டை ஓவியர் செல்லம் அவர்களின் ஓவியதிறனில் காட்டி இருந்தாலும் ஒரு திறமையான கலைஞன் எப்போதுமே டச் மட்டுமே இழப்பான் (வயதாவதால்) ஆனால் அந்த கிளாஸ் அப்படியே இருக்கும் என்பதை இந்த ஓவியங்களின் மூலம் அறியலாம். குறிப்பாக அந்த கதையில் வரும் சீடர்களின் முக பாவனைகளை காணுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதிரி வரைவதற்கு வேறு யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 1
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 1
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 2
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 2
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 3
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 3
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 4
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 4
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 5
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work GuruJi Paramarth Comics Page 5
குருஜி பரமார்த் - ஓவியர் செல்லம் அவர்களின் கைவண்ணம் - தேவியின் கண்மணி - காமிக்ஸ் சிறுகதை - பக்கம் 6
Deviyin Kanmani Dated Dec 2003 Chellam Art Work Small Comics Page 4 copy

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி) முழு பதிவுடன் வருகிறேன்.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,  
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin