காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உங்களின் மேலான ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.
வழக்கம் போல ஒரு இந்திரஜால் காமிக்ஸ் பதிவிடலாம் என்று என்னுடைய புதிய ஸ்கான் செய்யும் கருவியை எடுத்தேன். அப்போது தான் இந்த புத்தகம் கையில் கிடைத்தது. இதனை நான் வாங்கிய நியாபகமே இல்லை. சற்று யோசித்து பார்த்த பின்னர், இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை வந்து இருந்த போது அங்கே திரு முருகன் அவர்கள் கொடுத்த புத்தகம் என்பது நியாபகம் வந்தது. இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றிய விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் தலைவர் திரு முத்து விசிறி அவர்கள் இதனைப் பற்றி ஒரு பதிவு இட்டு உள்ளார்.அங்கு சென்றால் நீங்கள் வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அந்த பதிவுக்கான சுட்டி இங்கே: முத்து விசிறி
வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் இரண்டு வரிசையில் வந்தது. ஒன்று மாயாவி மற்றது டார்ஜான். மாயாவி கதைகள் வெறும் கருப்பு வெள்ளையில் வந்தது. விலை ஒரு ருபாய் ஐம்பது காசுகள். வெளி வந்த ஆண்டு 1972 முதல் 1975 வரை. ஆனால் டார்ஜான் கதைகளோ இரு வண்ணத்தில் அதே விலையில் வந்தது.
என்னிடம் இருக்கும் இந்த டார்ஜான் புத்தகத்தில் இரண்டு டார்ஜான் கதைகள் இருக்கின்றன. முதல் கதை இதோ:
இனிமேல் கதையின் மற்ற விஷயங்களை கவனிப்போம். இந்த கதையில் வேறு என்ன விஷயங்கள் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? தொடர்ந்து படியுங்கள்.
இந்திரஜால் காமிக்ஸ் தமிழாக்கம் பற்றி கிண்டல் செய்யும் நண்பர்கள் வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஏற்கனவே முத்து விசிறி அவருடைய வலைப் பூவில் இதனைப் பற்றி விரிவாக எழுதி இருப்பார். அதனால் நானுன் அதனை பற்றி எழுத விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் என்னாலேயே என்னை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அதனால் தான் இந்த காட்சியை பார்க்கும்படி கேட்கிறேன்.
மல் யுத்தம் எப்படி மல்ல யுத்தம் ஆனது என்பதை நம்முடைய கேரளா நாட்டு நண்பர்கள் தான் தெரிவிக்க வேண்டும். என்னுடைய அண்ணன் கூறும் லாஜிக் என்னவென்றால் இந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் தான் இந்திரஜால் காமிக்ஸ் இதழ்களுக்கும் பெயர்ப்பாளர் என்று. என்னால் அதனை நம்ப இயலவில்லை. எனென்றால் இந்திரஜால் காமிக்ஸ் கதைகளில் தமிழ் மொழி சற்று இடம் மாறி இருக்கும். அதனை தவிர வேறு எந்த பிழையும் இருக்காது (இது கொஞ்சம் இல்லை, ரொம்ப ஓவர்). ஆனால் அவர்கள் இது போல பிழைகளை செய்ய மாட்டர்கள்.
நம்முடைய லயன் மற்றும் முத்து காமிக்ஸ் கதைகளில் சில பல இடங்களில் ஒரிஜினல் ஆங்கில வசனங்களை அழிக்காமல் அதம் மேலோ அல்லது அருகிலோ தமிழ் வசனங்களை வெளியிட்டு இருப்பார்கள். அதனைப் போலவே இதோ இந்த கதையிலும் ஒரு கட்டம்.
அடுத்ததாக இன்னும் ஒரு விஷயம். இந்த கட்டத்தில் பார்த்தால் காரக் சிரிப்பது போல இருக்கும். ஆனால் வசன பலூனோ டார்ஜானை நோக்கி இருக்கும். இதனை போன்ற தவறுகள் வெகு சில இதழ்களிலே இருக்கும். இந்த மாதிரி தவறுகளை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. வேறு யாதாவது காமிக்ஸ் இதழ்களில் இது போன்ற தவறுகள் இருந்தால் பின்னுட்டத்தில் சுட்டிக் காட்டுங்கள் தோழர்களே.
இந்த புத்தகத்தின் உள் அட்டையில் இருந்த இந்த படத்தை பாருங்கள். இதனை எங்கோ பார்த்த நியாபகம் இருக்கிறதே என்று யோசித்தால், வாசு காமிக்ஸ் இதழ்க பற்றி நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஒருமுறை தன்னுடைய தலை சிறந்த காமிக்ஸ் வலைப் பதிவில் இட்ட பதிவு தான் இதற்க்கு மூலம் என்பது தெரிந்தது.
| வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான்- புத்தக விபரம் - Credits |
| வாசு காமிக்ஸ் - ஒலக காமிக்ஸ் ரசிகரின் இணையதளத்திலிருந்து எடுத்த படம் |
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.