Tuesday, April 14, 2009

ஏஜண்ட் X-9 பிலிப் காரிகன் அயலான் அடாவடி

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.இரண்டு வாரங்களுக்கு ஒரு பதிவு என்ற என்னுடைய கொள்கைக்கு மாறாக இந்த முறை, பதிவிட்ட ஒரே வாரத்தில் மறுபடியும் பதிவிட வந்து இருக்கிறேன் என்றால் அதற்க்கு காரணம் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூ மன்னர் விஸ்வா'வின் பிறந்த நாள் இன்று வருவதால் தான். பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் நண்பரே. அது மட்டுமில்லாமல் இன்று தமிழர்களின் புத்தாண்டும் கூட (அரசாங்கங்கள் சட்டங்களை மாற்றுவதால் பழக்கங்கள் மாறாது). அது மட்டுமில்லாமல் இன்று இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கும் கூட புத்தாண்டு தினமாகும்.

லயன் காமிக்ஸ் அடுத்த இதழ் காரிகனின் மாண்டவன் மீண்டான் என்று அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. புத்தகம் இந்த மாதம் வந்து விடும்,அடுத்த மாதம் வந்து விடும் என்று நானும் காத்து இருந்தேன். புத்தகம் வந்து விட்டால் அப்போது இந்த பதிவை இடலாம் என்று காத்து இருந்தே இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அதனால் கிங் விஸ்வா அவர்களின் பிறந்த நாள் பரிசாக இந்த பதிவு.

இந்திரஜால் காமிக்ஸ் இதக்களில் காரிகன் கதைகள் வர ஆரம்பித்தது குங்பு மன்னன் புருஸ் லீ'யின் கடைசி கதைக்கு பின்னர்.1982ல் காரிகனின் முதல் கதை வந்ததாக நினைவு. பத்திற்கும் மேற்பட்ட கதைகள். அவற்றில் இந்திரஜால் காமிக்ஸ்ல் வந்த அதே கதை பின்னர் லயன் காமிக்ஸ் இதழில் வந்தவை மொத்தம் நான்கு கதைகள். அவற்றில் இதுவும் ஒன்று.

கதையை படிக்க செல்லும் முன் ஒரு மன்னிப்பு கோரிக்கை: என்னிடம் இருக்கும் இந்திரஜால் காமிக்ஸ் இதழ்களிலேயே இந்த இதழ் தான் மோசமாக பாதிக்கப் பட்டு இருக்கும். தவறாக பைண்டிங் செய்யப்பட்டு, மழையில் நனைந்து, பக்கங்கள் மஞ்சளாகி என்று பல குறைகள். அதனால் ஸ்கான்கள் சற்றே தெளிவில்லாமல் இருக்கும். மன்னித்தருள்க.

 

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 1
01
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 2
02
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 3
03
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 4
04
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 5
05
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 6
06
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 7
07
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 8
08
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 9
09
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 10
10
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 11
11
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 12
12
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 13
13
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 14
14
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 15
15
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 16
16
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 17
17
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 18
18
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 19
19
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 20
20
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 21
21
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 22
22
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 23
23
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 24
24

எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த கதை இது என்பதால் மொழி பெயர்ப்பின் தரம் இன்னும் தாழ்ந்து இருக்கும் (அது சரி, இந்திரஜால் காமிக்ஸ்'ல் எப்போது மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது).

அதனால் கதையை சுருக்கமாக கூறி விடுகிறேன்: மலை உச்சியில் இருக்கும் ஒரு ஆராய்ச்சிக் குழு திடீரென்று காணமல் போகிறது. தன்னுடைய கணவனை காப்பாற்ற என்னும் ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் அந்த மலையின் அடிவாரத்தில் இருந்து அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து உதவியை எதிர்பார்கிறார்கள். ஓர் ஆண்டு ஆன பிறகும் அவள் கணவன் உயிருடன் இருப்பதாகவே அந்த பெண் நம்புகிறாள். அரசாங்கத்தால் அனுப்பப்படும் காரிகன் அவர்களின் நன்மதிப்பை கஷ்டப்பட்டு பெரும் தருணத்தில், கிடைக்கும் ஒரு எலும்புக்கூட்டை அவளின் கணவன் என்று நம்பும் அந்தப் பெண் காரிகன் வசப்படுகிறாள். அப்போது மலை உச்சியில் இருந்து அயல்கிரகவாசிகளால் அவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

விஞ்சான அறிவில் பல மடங்கு உயர்ந்த அவர்களின் தலைவன் மிர் அவர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்களே என்பதை கூறுகிறான். அவனது உதவியாளன் டுருவா'வை காரிகன் வெறுப்புக்கு உள்ளாக்கி நேரடி மோதலுக்கு வரவழைத்து கொல்கிறான்.அதனால் மிர் அவர்களை விட்டு செல்ல முடிவு எடுக்கிறான்.

காரிகனின் மதி நுட்பத்தால் கவரப்பட்ட மிர், அந்தப் பெண்ணின் கணவன் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தன்னக்கு தடையாக இருந்த டுருவா'வை காரிகன் நீக்கியதைப்போல தானும் காரிகனுக்கு தடையாக இருக்கும் அந்தப் பெண்ணின் கணவனை கொன்று காரிகனின் காதலுக்கு வழி செய்வதாக கூறுகிறான்.

ஆனால் காரிகன் அதனை மறுத்து அந்தப் பெண்ணை கணவனுடன் சேர்த்து விட்டு தனி ஆளாக நிற்க்கிறான். அதனால் மிர் காரிகனை தன்னுடன் செவ்வாய் கிரகத்துக்கு வருமாறு அழைத்தும் காரிகன் மறுத்து பூமியிலேயே  தங்கி விடுகிறான். மிர் தன் சகாக்களோடு திரும்பி செல்கிறான்.

ஏற்கனவே கூறியபடி லயன் காமிக்ஸ் இதழில் இந்த கதை என்பதாவது இதழில் வந்து உள்ளது. அந்த புத்தகத்தின் அட்டைப் படமும், முதல் பக்கமும் இதோ:

லயன் காமிக்ஸ் ஒரு பனிமலை பயங்கரம்=அயலான் அடாவடி இந்த முதல் பக்கத்தையும் படித்து பாருங்கள்
Lion Comics Same Corrigan Story Cover Lion Comics 1st Page

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Related Posts Widget for Blogs by LinkWithin