
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.சென்ற பதிவிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. நானே இதனை எதிர் பார்க்கவில்லை.
தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த பதிவை சென்ற வாரமே இட இயலவில்லை. அடுக்கு மொழியில் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் அகில உலக அ.கொ.தீ.க. தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களின் பதின்ம வயது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவருக்கு இந்த பதிவை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன்.
கடந்த ஒரு வார காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு - என் பார்வையில்:
இதுவரையில் வெறும் மீள் பதிவுகளை மட்டுமே கண்டு வந்த தமிழ் காமிக் தளத்திற்கு விடிவு காலம் வந்து விட்டது போல. மதுரையை சேர்ந்த ஜாலி ஜம்ப்பர் என்ற பழைய பதிவர் மறுபடியும் வந்து இந்த வலைப் பூவுக்கு மறு வாழ்வு தந்து உள்ளார். பத்து பேர் பதிவர்களாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூங்கி கொண்டு இருந்த இந்த தளத்தை தட்டி எழுப்ப வந்துள்ளார் ஜாலி ஜம்ப்பர். முதலில் ஒரு டீசர் பதிவாக, அதுவும் சிறந்த டீசர் ஆக வருகை தந்து உள்ளார்.
சென்னையை சேர்ந்த லக்கி லிமட்டும் இந்த தளத்தில் இப்போது சேர்ந்து உள்ளார். அதனால் விரைவில் நல்லவை நடக்கும் என்று நம்புகிறேன். நண்பர் லக்கி லிமட் தன்னுடைய புல் செட் வல்கன்'ஐ ஒவ்வொன்றாக களமிறக்குகிறார். அதிலும் இந்த பதிவிற்காக சிரமப் பட்டு இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இந்த சிறு வயதில் இப்படி அட்டகாசமாக செயல்படும் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நண்பர் கனவுகளின் காதலன் மீள் தூக்கத்தில் இருந்து விடுபட்டவரை போல அடுத்தடுத்து இரண்டு அதிரடி படங்களை பற்றிய விமர்சனத்துடன் களம் இறங்கியுள்ளார். இந்த புதிய விமரிசனங்கள் தொடரும் என்றே நம்புகிறது வலையுலகம். மேலும் சில பதிவர்கள் இதனைப் போலவே மாறுவதற்கும் வாய்புள்ளது.
எங்குமே கிடைக்காத ஒரு அரிய பதிவை இட்டு உள்ளார் நண்பர் காமிக்ஸ் பிரியர். அவருக்கு நம் வாழ்த்துக்கள். அவர் தொடருவார் என்பதை அவருடைய புதிய பன்ச் லைன் சொல்கிறது.
பதிவுலகிற்கு ஒரு புதிய திருப்பமாக ஒலக காமிக்ஸ் ரசிகன் திரும்பி வந்துள்ளார். அவருடைய கமெண்டுகளின் மூலமே தமிழ் காமிக்ஸ் மேல் உள்ள அவருடைய ஆழ்ந்த புரிதலை உணரலாம். திரும்ப வந்தமைக்கு நன்றி நண்பரே.
அற்புதமான கிசு கிசுக்களை அள்ளி வழங்கியுருக்கிறார்கள் பூங்காவனமும் கிசு கிசு கோபாலும். ஏஜண்ட் காத்தவ் யாரோ ஒரு மிர்சாவுடன் தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்.ஆனால் என்னைப் பற்றி எதுவும் இல்லை என்பது நல்ல விஷயமா இல்லையா என்பது தெரியவில்லை
இனிமேல் கதையை படித்து என்சாய் செய்யுங்கள்.
கதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன். இந்த கதையில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்து உங்களுக்கு வழங்குகிறேன்.
இப்போது கதை நடக்கும் தளம் சென்னை.
வேதாளர் = விஜய டி.ராஜேந்தர்
டன்கேல வைரம் = மகன் சிம்பு
கோபத்தில் வீட்டில் விட்டு வந்து விட்ட மகன் சிம்புவை தேடி சென்னைக்கு வருகிறார் வேதாளர் விஜய டி.ராஜேந்தர். இதற்க்கு மேல் நீங்கள் எழுதுவது தான் கதை.
கனவுகளின் காதலர் அவர்களுக்கும், பயங்கரவாதி டாக்டர் செவனுக்கும், லக்கி லிமட்டுக்கும் சிறப்பு அழைப்பு. கண்டிப்பாக நீங்கள் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்டங்களில் விஜய டி.ராஜேந்தர் என்ன கூறி இருப்பார் என்பதை கமெண்ட் ஆக இடுங்களேன்?
அதற்காக மற்றவர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்பது இல்லை. ஒலக காமிக்ஸ் ரசிகன், விஸ்வா, அய்யம்பாளையம் Sir என்று பலரும் வந்து தங்களின் கருத்துக்களை கூறி செல்ல வேண்டும். செய்வீர்களா?
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
பதிவிற்கு பின்னர் செய்யப் படும் / வலையேற்றப் படும் மாற்றங்கள்:
நண்பர் லக்கி லிமட் உடனடியாக களப் பணியில் இறங்கி விட்டார். அதனால் இதோ அவர் தயாரிப்பில் வந்த முதல் பக்கம்:
லக்கி லிமட் அவர்களின் கை வண்ணத்தில் இரண்டாவது பக்க மொழி பெயர்ப்பு:
நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்து விட்டார். இதோ அவரின் கை வண்ணம்: