காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.சென்ற பதிவிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. நானே இதனை எதிர் பார்க்கவில்லை.
தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த பதிவை சென்ற வாரமே இட இயலவில்லை. அடுக்கு மொழியில் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் அகில உலக அ.கொ.தீ.க. தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களின் பதின்ம வயது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவருக்கு இந்த பதிவை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன்.
கடந்த ஒரு வார காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு - என் பார்வையில்:
இதுவரையில் வெறும் மீள் பதிவுகளை மட்டுமே கண்டு வந்த தமிழ் காமிக் தளத்திற்கு விடிவு காலம் வந்து விட்டது போல. மதுரையை சேர்ந்த ஜாலி ஜம்ப்பர் என்ற பழைய பதிவர் மறுபடியும் வந்து இந்த வலைப் பூவுக்கு மறு வாழ்வு தந்து உள்ளார். பத்து பேர் பதிவர்களாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூங்கி கொண்டு இருந்த இந்த தளத்தை தட்டி எழுப்ப வந்துள்ளார் ஜாலி ஜம்ப்பர். முதலில் ஒரு டீசர் பதிவாக, அதுவும் சிறந்த டீசர் ஆக வருகை தந்து உள்ளார்.
சென்னையை சேர்ந்த லக்கி லிமட்டும் இந்த தளத்தில் இப்போது சேர்ந்து உள்ளார். அதனால் விரைவில் நல்லவை நடக்கும் என்று நம்புகிறேன். நண்பர் லக்கி லிமட் தன்னுடைய புல் செட் வல்கன்'ஐ ஒவ்வொன்றாக களமிறக்குகிறார். அதிலும் இந்த பதிவிற்காக சிரமப் பட்டு இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இந்த சிறு வயதில் இப்படி அட்டகாசமாக செயல்படும் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நண்பர் கனவுகளின் காதலன் மீள் தூக்கத்தில் இருந்து விடுபட்டவரை போல அடுத்தடுத்து இரண்டு அதிரடி படங்களை பற்றிய விமர்சனத்துடன் களம் இறங்கியுள்ளார். இந்த புதிய விமரிசனங்கள் தொடரும் என்றே நம்புகிறது வலையுலகம். மேலும் சில பதிவர்கள் இதனைப் போலவே மாறுவதற்கும் வாய்புள்ளது.
எங்குமே கிடைக்காத ஒரு அரிய பதிவை இட்டு உள்ளார் நண்பர் காமிக்ஸ் பிரியர். அவருக்கு நம் வாழ்த்துக்கள். அவர் தொடருவார் என்பதை அவருடைய புதிய பன்ச் லைன் சொல்கிறது.
பதிவுலகிற்கு ஒரு புதிய திருப்பமாக ஒலக காமிக்ஸ் ரசிகன் திரும்பி வந்துள்ளார். அவருடைய கமெண்டுகளின் மூலமே தமிழ் காமிக்ஸ் மேல் உள்ள அவருடைய ஆழ்ந்த புரிதலை உணரலாம். திரும்ப வந்தமைக்கு நன்றி நண்பரே.
அற்புதமான கிசு கிசுக்களை அள்ளி வழங்கியுருக்கிறார்கள் பூங்காவனமும் கிசு கிசு கோபாலும். ஏஜண்ட் காத்தவ் யாரோ ஒரு மிர்சாவுடன் தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்.ஆனால் என்னைப் பற்றி எதுவும் இல்லை என்பது நல்ல விஷயமா இல்லையா என்பது தெரியவில்லை
இனிமேல் கதையை படித்து என்சாய் செய்யுங்கள்.
கதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன். இந்த கதையில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்து உங்களுக்கு வழங்குகிறேன்.
இப்போது கதை நடக்கும் தளம் சென்னை.
வேதாளர் = விஜய டி.ராஜேந்தர்
டன்கேல வைரம் = மகன் சிம்பு
கோபத்தில் வீட்டில் விட்டு வந்து விட்ட மகன் சிம்புவை தேடி சென்னைக்கு வருகிறார் வேதாளர் விஜய டி.ராஜேந்தர். இதற்க்கு மேல் நீங்கள் எழுதுவது தான் கதை.
கனவுகளின் காதலர் அவர்களுக்கும், பயங்கரவாதி டாக்டர் செவனுக்கும், லக்கி லிமட்டுக்கும் சிறப்பு அழைப்பு. கண்டிப்பாக நீங்கள் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்டங்களில் விஜய டி.ராஜேந்தர் என்ன கூறி இருப்பார் என்பதை கமெண்ட் ஆக இடுங்களேன்?
அதற்காக மற்றவர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்பது இல்லை. ஒலக காமிக்ஸ் ரசிகன், விஸ்வா, அய்யம்பாளையம் Sir என்று பலரும் வந்து தங்களின் கருத்துக்களை கூறி செல்ல வேண்டும். செய்வீர்களா?
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
பதிவிற்கு பின்னர் செய்யப் படும் / வலையேற்றப் படும் மாற்றங்கள்:
நண்பர் லக்கி லிமட் உடனடியாக களப் பணியில் இறங்கி விட்டார். அதனால் இதோ அவர் தயாரிப்பில் வந்த முதல் பக்கம்:
லக்கி லிமட் அவர்களின் கை வண்ணத்தில் இரண்டாவது பக்க மொழி பெயர்ப்பு:
நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்து விட்டார். இதோ அவரின் கை வண்ணம்:
வேதாளரின் அருமையான ஒரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி சுலாகி.
ReplyDeleteநண்பரே புலா சுலாகி,
ReplyDeleteஎன்னை ஆட்டத்திற்கு அழைத்ததற்கு நன்றி . தனியாக அழைத்த பின் ஆடாமல் விடுவோமா ! முதல் படத்திற்க்கான வசனங்கள் ... அந்த படத்திலேயே பதிந்து விட்டேன்
இந்த சுட்டியை கிளிக் செய்யவும்
http://i44.tinypic.com/14khapg.jpg
அடுத்த படத்திற்க்கான வசனங்கள் மற்றும் உங்கள் பதிவுக்கான பின்னூட்டம் விரைவிலேயே இடுகிறேன்
Lovingly,
Lucky Limat
Browse Comics
This comment has been removed by the author.
ReplyDelete//பட்டணத்திலா எத்தனைத் தேட?//
ReplyDeleteஏதேது?!! இது மாதிரி கதையில் வரும் வசனங்களைத் தொகுத்துப் போட்டாலே உங்கள் போட்டியில் வெற்றி பெற்று விடலாம் போலிருக்கிறதே?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.
ReplyDeleteஉங்களின் ஆதரவை இந்த வித்தியாசமான போட்டியில் கலந்து கொண்டு வெளிப் படுத்துங்களேன்?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
நண்பரே, நல்ல ஒர் வேதாளன் கதையை படித்த திருப்தி, அருமையான சித்திரங்கள், விறு விறுப்பான நடை என சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteகாய்கறி வியாபாரம் தலை காக்கும் எனும் பன்ச் டயலாக்கிற்கு கைதட்டலாம்.
டெவில் எப்போது வாலியாக மாறியது.
வைரத்தை சாப்பிட முடியுமா தாத்தா- அருமையான வரி.
நீல ரெயின் கோட்டில் வேதாளர் கெட்டப் டாப்போ டாப்பு.
லக்கி லிமட் வேறு பின்னி எடுத்து இருக்கிறார் போட்டி நல்ல ஒர் கற்பனை. பாராட்டுக்கள்.
கதைக்கு நன்றி நண்பரே தொடருங்கள் உங்கள் மகத்தான சேவையை.
அன்பரே புலா சுலாகி ,
ReplyDeleteவேதாளர் கதையை வழங்கியதற்கு நன்றி . இதழின் அட்டை படம் மிக அருமை .
எனது இரண்டாவது படத்திற்க்கான வசனங்கள்...
இந்த சுட்டியை கிளிக் செய்யவும்
http://i41.tinypic.com/k03m95.jpg
Lovingly,
Lucky Limat
Browse Comics
கனவுகளின் காதலரே,
ReplyDelete//டெவில் எப்போது வாலியாக மாறியது.//
தமிழ் இந்திரஜாலின் விசேடமே இதுதான்! ஆரம்பம் (1960கள்) முதல் டெவிலின் பெயர் வாலிதான்!
அதே போல் ஹீரோவின் பெயர் என்ன தெரியுமா? கேசரி!
இவ்வளவு ஏன், PHANTOM-ஐ முதன்முதலாக வேதாளர் என்று அழைத்த பெருமையும் இந்திரஜாலுக்குரியதே!
இந்திரஜாலின் தமிழ் மொழிபெயர்ப்பு லயன், முத்து போல் POLISHED ஆக இல்லாவிடினும், மொழிநடையில் சிறந்து விளங்குவது ஆரம்ப காலத்து இந்திரஜாலேயாகும்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
கேசரி என்றதும் யாரும் சுவையான தின்பண்டத்தினை நினைவு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!
ReplyDeleteகேசரியின் பல அருஞ்சொற்பொருட்களில் குதிரை என்பதும் ஒன்றாகும்! ஏதோ ஒரு மன்னரின் (தேசிங்கு ராஜா என்றுதான் நினைக்கிறேன்) குதிரையின் பெயர் கூட வீரகேசரி தான்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
மன்னிக்கவும் பிழை நேர்ந்து விட்டது! தேசிங்கு ராஜாவின் குதிரையின் பெயர் நீலவேணி! மாமன்னர் அலெக்ஸாண்டர் போல் இவரும் 15 வயதிலேயே இக்குதிரையை அடக்கி பரிசாக தன் மனைவியை கரம் பிடித்தார்!
ReplyDeleteவீரகேசரி குதிரையின் மீதேறி எந்த மாமன்னர் ராஜவலம் வந்தார் என்று யாருக்கேனும் தெரிந்தால் எனக்கு தெரிவித்து எனது அறியாமையைப் போக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
கேசரி = புரவி என்று நானும் சிறு வயதில் படித்து இருக்கிறேன்.
ReplyDeleteஆனால் இந்த கேசரி எந்த ஒரு மன்னரையும் அல்லது அவரது குதிரையையும் மனதில் கொள்ளாமல் நேரடி மொழி பெயர்ப்பாகவும் கூட இருக்கலாம்.
கூகிளில் கேசரி என்று தேடினால் சிதாராம் கேசரி தான் வருகிறார். என்ன செய்ய?
தலைவரே,
ReplyDelete//அலெக்ஸாண்டர் போல் இவரும் 15 வயதிலேயே இக்குதிரையை அடக்கி பரிசாக தன் மனைவியை கரம் பிடித்தார்!//
யாருடைய 15ஆவது வயதில்?
குதிரையின் 15ஆவது வயதிலா?
தேசிங்கு ராஜாவின் 15ஆவது வயதிலா?
அல்லது அவருடைய மனைவியின் 15ஆவது வயதிலா?
கிசுகிசு கோபால்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே
கோபாலின் லீலைகள்
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, என் சந்தேகத்தை தீர்த்து வைத்ததிற்கு நன்றி.
ReplyDeleteகோபாலு மாமா, கொல்றீங்களே.
கிசு கிசு கோபால் அவர்களே,
ReplyDelete////அலெக்ஸாண்டர் போல் இவரும் 15 வயதிலேயே இக்குதிரையை அடக்கி பரிசாக தன் மனைவியை கரம் பிடித்தார்!//
யாருடைய 15ஆவது வயதில்?
குதிரையின் 15ஆவது வயதிலா?
தேசிங்கு ராஜாவின் 15ஆவது வயதிலா?
அல்லது அவருடைய மனைவியின் 15ஆவது வயதிலா?//
நன்றி.
அலெக்சாண்டரின் 15ஆவது வயதிலா? என்று கேட்காமல் விட்டதற்கு.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
கனவுகளின் காதலரே,
ReplyDelete//காய்கறி வியாபாரம் தலை காக்கும் எனும் பன்ச் டயலாக்கிற்கு கைதட்டலாம்.// இந்த பன்ச் வசனத்திற்கும் வாத்தியார் நடித்த தர்மம் தலை காக்கும் என்ற படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
லக்கி லிமட்,
ReplyDelete//இதழின் அட்டை படம் மிக அருமை .// அது தான் இந்திரஜால் காமிக்ஸின் சிறப்பு அம்சம். செஹாப் என்ற ஓவியரின் கை வண்ணம் தான் அது. முன்னூற்றுக்கும் மேற்பட்ட இந்திரஜால் அட்டைப் படங்களை வரைந்தவர் இவர்.
இது கூட ஒரு வகையில் சாதனையே.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
தலைவரே,
ReplyDelete//இவ்வளவு ஏன், PHANTOM-ஐ முதன்முதலாக வேதாளர் என்று அழைத்த பெருமையும் இந்திரஜாலுக்குரியதே!// முற்றிலும் உண்மை.
வேதாளர் முதலில் அறிமுகப் படுத்தப் பட்டது குமுதம் வார இதழில் தான். அதில் அவர் பெயர் முகமூடி. எனக்கு தெரிந்து இந்திரஜால் காமிக்ஸ் குழுமத்தினருக்கு பின் அவரை வேதாளர் என்று பெயரிட்டு அழைத்தது முத்து காமிக்சும் முத்து மினி காமிச்க்சும் மட்டுமே.
ராணி காமிக்ஸில் அவர் மாயாவி என்று அழைக்கப் பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
தலைவரே,
ReplyDelete//வீரகேசரி குதிரையின் மீதேறி எந்த மாமன்னர் ராஜவலம் வந்தார் என்று யாருக்கேனும் தெரிந்தால் எனக்கு தெரிவித்து எனது அறியாமையைப் போக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்!//
ரிப்பீட்டு.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
விஸ்வா அவர்களே,
ReplyDelete//கூகிளில் கேசரி என்று தேடினால் சிதாராம் கேசரி தான் வருகிறார். என்ன செய்ய?//
நல்ல வேடிக்கை.
ஆனால் அவர் பெயர் சிதாராம் யெச்சுரி தானே?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
thalaivaa,
ReplyDeletenee vazga. thodarattum un sevai.
அடுத்த பதிவு எங்கே?
ReplyDeleteகாமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
ஜூலை நான்காம் தேதி என்ன ஸ்பெஷல்?
அடுத்த பதிவு எங்கே?
ReplyDeletetomorrow.
அருமையான பதிவு நன்பரே... இவர்கள் வேதாளன், ராணி காமிக்ஸ் மாயாவி.
ReplyDeleteஎங்கள் ஊரில் மயாவி என்ற பெயர்தான் பிரபலம். ;)
அப்படியே Mr. J இன் பதிவுகளையும் காணுங்கள்
நன்றி சார் !
ReplyDeleteநன்றி சார் !
ReplyDelete