
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. தீபாவளியை கூட தொடர்ந்து குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இருக்கிறேன். விடுங்கள், என்னுடைய சொந்தக்கதை, சோகக்கதை உங்களுக்கு எதற்கு? நம்முடைய அடுத்த பதிவிற்கு செல்வோம். ஆம், நெடுநாள் கழித்து இன்றுதான் நிறைய நேரம் கிடைத்தது. ஆகையால் இரண்டு, மூன்று இந்திரஜால் காமிக்ஸ்'களை இன்று ஸ்கான் செய்துவிடுவது என்று முடிவெடுத்தான். அதன் முதல் கட்டமாக இதோ இந்த முன்னோட்ட பதிவு:
ஏற்கனவே நம்முடைய பதிவில் காமிக்ஸ் வீரர் பஸ் சாயரின் (முத்து காமிக்ஸ் சார்லி) கதைகளை படித்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதிய வாசகர்களுக்கு அவரின் கதைகளுக்கான லின்க்குகள் இதோ:
1. அறுந்த நரம்புகள் - புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி)
2. ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்
இந்த அட்டைப்படம்தான் அடுத்து வரப்போகும் நம்முடைய பதிவின் காமிக்ஸ்:
கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் No 54 - பஸ் சாயர் - அட்டைப்படம் |
எனக்கு நகைச்சுவை நதிகளில் ஜோடியாக வந்து கலக்கும் கவுண்டமணி-செந்தில் ஜோடி மிகவும் பிடிக்கும் (நம்ம பயங்கரவாதி டாக்டர் செவன் போல). இந்த அக்பர் பீர்பால் அக்தையில் வரும் சம்பவமானது ஒரு கவுண்டமணி செந்தில் காமெடி சீனில் வரும். கவுண்டரும் அவரது மனைவியும் ஓய்வு எடுக்கும்போது செந்தில் வெளியில் மாட்டை காவல் காத்திருப்பார், அவர் செந்திலின் புத்திகூர்மையை என்னை வியந்துகொண்டிருக்கும்போது செந்தில் பல கேள்விகளை கேட்பார். அவரது அறிவு கூர்மையை எண்ணி கவுண்டர் வியந்துக்கொண்டிருக்கும்போது செந்தில் தான் இருக்கும்போதே மாடு திருடு போனதை எண்ணி வியப்பார். பின்னர் என்ன? வழக்கம் போல கவுண்டர் உதைப்பார். செந்தில் வாங்குவார்.
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - நட்சத்திர நகைச்சுவை: அக்பர் பீர்பால் |
நம்முடைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் இதழ்களில் வரும் பில்லர் கதைகள் நம்மை மிகவும் கவர்ந்தவை. ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவுமே வருவதில்லை. ஆசிரியர் இதனை கவனிக்க வேண்டும். இதோ இந்திரஜால் காமிக்ஸில் வந்த இரண்டு பில்லர்கள்:
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - மணியன் - சுட்டிப்பைய்யன் |
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - ஹீத்கிளிப் - சொல்வதற்கு ஒன்றுமில்லை |
டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் இந்த காமிக்ஸ் வந்ததால் வர்த்தக விஷயத்தில் அவர்கள் எப்போதுமே குறை போனதில்லை. ஆகையால் எப்போதுமே இரண்டு மூன்று விளம்பரங்கள் இருக்கும். நம்முடைய ராணி காமிக்ஸில் கூட சில பல விளம்பரங்கள் இருக்கும். அந்த காமிக்ஸ் தினத்தந்தி குழுமத்தில் இருந்து வந்ததால் இப்படி ஒரு வசதி. ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸில் மட்டும் இதுவரை விளம்பரங்களே வந்ததில்லை (ஓரிரு விளம்பரங்களை தவிர).
மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று) முழு பதிவுடன் வருகிறேன் - இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்