Sunday, November 14, 2010

கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் - பஸ் சாயர் - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. தீபாவளியை கூட தொடர்ந்து குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இருக்கிறேன். விடுங்கள், என்னுடைய சொந்தக்கதை, சோகக்கதை உங்களுக்கு எதற்கு? நம்முடைய அடுத்த பதிவிற்கு செல்வோம். ஆம், நெடுநாள் கழித்து இன்றுதான் நிறைய நேரம் கிடைத்தது. ஆகையால் இரண்டு, மூன்று இந்திரஜால் காமிக்ஸ்'களை இன்று ஸ்கான் செய்துவிடுவது என்று முடிவெடுத்தான். அதன் முதல் கட்டமாக இதோ இந்த முன்னோட்ட பதிவு:

ஏற்கனவே நம்முடைய பதிவில் காமிக்ஸ் வீரர் பஸ் சாயரின் (முத்து காமிக்ஸ் சார்லி) கதைகளை படித்து மகிழ்ந்து இருப்பீர்கள். புதிய வாசகர்களுக்கு அவரின் கதைகளுக்கான லின்க்குகள் இதோ:

1. அறுந்த நரம்புகள் - புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி)

2. ராஜாளி ராஜாப்பயல் - இந்திரஜால் காமிக்ஸ் - புஸ் சாயர்

இந்த அட்டைப்படம்தான் அடுத்து வரப்போகும் நம்முடைய பதிவின் காமிக்ஸ்:

கம்பி நீட்டிய கள்ளி - இந்திரஜால் காமிக்ஸ் No 54 - பஸ் சாயர்  - அட்டைப்படம்

IJC #54 Cover

எனக்கு நகைச்சுவை நதிகளில் ஜோடியாக வந்து கலக்கும் கவுண்டமணி-செந்தில் ஜோடி மிகவும் பிடிக்கும் (நம்ம பயங்கரவாதி டாக்டர் செவன் போல). இந்த அக்பர் பீர்பால் அக்தையில் வரும் சம்பவமானது ஒரு கவுண்டமணி செந்தில் காமெடி சீனில் வரும். கவுண்டரும் அவரது மனைவியும் ஓய்வு எடுக்கும்போது செந்தில் வெளியில் மாட்டை காவல் காத்திருப்பார், அவர் செந்திலின் புத்திகூர்மையை என்னை வியந்துகொண்டிருக்கும்போது செந்தில் பல கேள்விகளை கேட்பார். அவரது அறிவு கூர்மையை எண்ணி கவுண்டர் வியந்துக்கொண்டிருக்கும்போது செந்தில் தான் இருக்கும்போதே மாடு திருடு போனதை எண்ணி வியப்பார். பின்னர் என்ன? வழக்கம் போல கவுண்டர் உதைப்பார். செந்தில் வாங்குவார்.

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - நட்சத்திர நகைச்சுவை: அக்பர் பீர்பால்

IJC #54 Birbal 01
IJC #54 Birbal 02
IJC #54 Birbal 03
IJC #54 Birbal 04
IJC #54 Birbal 05

நம்முடைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் இதழ்களில் வரும் பில்லர் கதைகள் நம்மை மிகவும் கவர்ந்தவை. ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவுமே வருவதில்லை. ஆசிரியர் இதனை கவனிக்க வேண்டும். இதோ இந்திரஜால் காமிக்ஸில் வந்த இரண்டு பில்லர்கள்:

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - மணியன் - சுட்டிப்பைய்யன்

IJC #54 Manian

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - கம்பி நீட்டிய கள்ளி - ஹீத்கிளிப் - சொல்வதற்கு ஒன்றுமில்லை

IJC #54 Heath Cliff

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் இந்த காமிக்ஸ் வந்ததால் வர்த்தக விஷயத்தில் அவர்கள் எப்போதுமே குறை போனதில்லை. ஆகையால் எப்போதுமே இரண்டு மூன்று விளம்பரங்கள் இருக்கும். நம்முடைய ராணி காமிக்ஸில் கூட சில பல விளம்பரங்கள் இருக்கும். அந்த காமிக்ஸ் தினத்தந்தி குழுமத்தில் இருந்து வந்ததால் இப்படி ஒரு வசதி. ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸில் மட்டும் இதுவரை விளம்பரங்களே வந்ததில்லை (ஓரிரு விளம்பரங்களை தவிர).

IJC #54 Ad 1 IJC #54 Ad 2 IJC #54 Ad 3

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் (அடுத்த ஞாயிறு அன்று) முழு பதிவுடன் வருகிறேன் - இனிமேல் ஒவ்வொரு ஞாயிறும் பதிவு உண்டு.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி, 
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்

18 comments:

  1. வாங்க தலைவரே.

    முதன்மை வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. இனிமேல தொடர்ந்து பதிவிடுவது குறித்து மகிழ்ச்சி! கதையை முழுமையாகப் படிக்க ஆவலுடன் உள்ளேன் (ஏற்கெனவே படித்திருந்தாலும்)! வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. மீ தி செகண்டு, ச்சே ஜஸ்ட் மிஸ்சு. மீ தி தேர்டு.

    நம்ம பயங்கரவாதிக்கு முன்னை வரவே முடியாதா?

    இருந்தாலும்கூட நம்ம ஒலக காமிக்ஸ் ரசிகருக்கும், சிபி அண்ணனுக்கும் முன்னாடி வந்ததுல மகிழ்ச்சி

    ReplyDelete
  4. அருமையான கதை இது. அந்த பீர்பால் கதையை நான் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து பதிவிடுங்கள். இப்போதுதான் காமிக்ஸ் உலகில் ஒரு மறுமலர்ச்சி வந்துள்ளது. அதனை தொடரலாம்.

    ReplyDelete
  5. வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி பயங்கரவாதி அவர்களே.


    தொடர்ந்து பதிவிட ஆசைதான். முயல்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி விஸ்வா.

    மறுமலர்ச்சி? அப்படியே நம்புகிறேன்.

    ReplyDelete
  7. தீபாவளியை கூட தொடர்ந்து குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இருக்கிறேன். விடுங்கள், என்னுடைய சொந்தக்கதை, சோகக்கதை உங்களுக்கு எதற்கு? இப்படி எழுதி எங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது ஏனோ ??! அடுத்ததாக கம்பி நீட்டிய கள்ளி -காக காத்துருக்கிறோம் .

    ReplyDelete
  8. நெடுநாளாக கம்பி நீட்டிய கள்ளன் வந்துட்டாருய வந்துட்டாரு...

    ReplyDelete
  9. // உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பதிவிட ஆசையாக இருந்தாலும் கூட பணி என்னை தடுக்கிறது. தீபாவளியை கூட தொடர்ந்து குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இருக்கிறேன். //

    என்ன கொடுமை சார் இது :((
    அடுத்த வருடம் கண்டிப்பாக உங்கள் குடும்பத்துடன் தீபாவளியை குதூகாலமாக கொண்டாட எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பாராக :))
    .

    ReplyDelete
  10. அடச்சே
    என்ன கொடுமை சார் இது :((
    நம்ம தலைவர் பயங்கரவாதிக்கு முன்னை வரவே முடியாதா?
    இருந்தாலும்கூட நம்ம ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு முன்னாடி வந்ததுல மகிழ்ச்சி :))
    .

    ReplyDelete
  11. // தொடர்ந்து பதிவிட ஆசைதான். முயல்கிறேன். //

    முயலுங்கள்
    முயற்சி திரு வினையாக்கும்
    நாங்களும் காத்திருக்கிறோம்
    .

    ReplyDelete
  12. சின்ன வயது நினைவுகளை தட்டி எழுப்புகிறீர்கள்

    ReplyDelete
  13. இந்த இந்திரஜால் காமிக்ஸ் என்னிடம் உள்ளது. அருமையான நடை. தெளிவான கதை. விரைவில் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  14. உங்களிடம் இருந்து தொடர் பதிவுகளை விமரிசையாக எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. ஸ்கான் வேண்டுமென்றால் எனக்கு மெயில் செய்யவும்.

    ReplyDelete
  16. புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


    இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

    ReplyDelete
  17. ஞாயிற்றுக்கிழமையும் வந்து போய்விட்டது! அடுத்த ஞாயிறும் வரவிருக்கிறது! காமிக்ஸ் எங்கே?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  18. உங்களுக்கும் மற்றும்

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin