Thursday, February 26, 2009

இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம் (ராணி காமிக்ஸ-பேய்க்காடு)

அனைவருக்கும் வணக்கம்.

நண்பர்கள் அனைவரும் காமிக்ஸ் பற்றி எழுதி என்னுடைய ஆர்வத்தையும் தூண்டி விட்டு விட்டார்கள். நானும் என்னுடைய நீண்ட நாள் பேவரிட் ஆன இந்திரஜால் காமிக்ஸ் பற்றி ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இதனை ஆரம்பித்துள்ளேன். ஆதரவு தருவீர்கள் என்றே நம்புகிறேன்.

 

என்னிடம் மொத்தம் நூற்றி ஐம்பது இந்திரஜால் காமிக்ஸ் (தமிழ்) உள்ளது. அவற்றை எல்லாம் ஸ்கான் செய்து இங்கே வெளியிடலாம் என்பதே என் எண்ணம். ஆங்கிலத்தில் பல இந்திரஜால் காமிக்ஸ் தளங்கள் இருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை. அந்த குறையை நீக்கவே இந்த முயற்சி.

 

சிலர் இந்திரஜால் காமிக்ஸ் தமிழாக்கம் பற்றி குறை கூறலாம். ஆனாலும் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய தவறு தெரியவில்லை. நான் மும்பை'யிலேயே பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இந்த கதை ஏற்கனவே ராணி காமிக்ஸ் இதழில் வந்து உள்ளது.


இந்த டவுன்லோட் எனக்கு த காமிக்ஸ் புராஜெக்ட் என்ற வலைதளத்தில் இருந்து கிடைத்தது. அடுத்த பதிவு முதல் என்னுடைய ஸ்கான்'களை வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன்.


என்னடா, முதல் கதையையே இப்படி ஒரு (சரி, சொல்லி விடலாம்) மொக்கை கதையாக பதிவு இடுகிறோமே என்று நினைக்க வேண்டாம். ஆனாலும் இதில் ஒரு செண்டிமென்ட் உள்ளது. நான் முதலில் தமிழில் படித்த பேன்டம் (வேதாளர் = மாயாவி) கதை இது தான். ராணி காமிக்ஸ் இதழில் இது இரண்டாவது மாயாவி கதை என்று நினைக்கிறேன் (முதல் கதை ரகசிய போலிஸ் 000). அதனால் தான் இந்த கதையை முதன் முதலில் பதிவிடுகிறேன். மன்னிக்கவும்.


கதையின் பக்கங்கள் இதோ:

<></> <></>

<>இந்த கதையை ஏதோ பெரிய சண்டை கதை போல ராணி காமிக்ஸ் நிர்வாகத்தினர் அட்டை படத்தில் மாயாவி மோதுவதை போட்டு இருந்தனர். இந்த மந்திரக் கள்ளி மாயம் கதை தான் பேய்க் காடு என்பது தெரிந்து இருந்தால் சத்தியமாக அந்த ராணி காமிக்ஸ்'ஐ வாங்கியே இருக்க மாட்டேன். </> <>
</> <>
</> <>
</> <>

மேலும் இந்த கதையில் சில பேனல்கள் மீண்டும் மீண்டும் வந்து இருப்பதை நீங்கள் காணலாம். ராணி காமிக்ஸ் நிர்வாகத்தினர் இன்னும் ஒரு படி மேலே போய் இதிலும் சில பேனல்களை திரும்பவும் போட்டு இருப்பார்கள்.

</> <>
</> <>

 

அதில் ஒன்று மாயாவி ஒருவனை குத்துவதை போல இருக்கும் பேணல் ஆகும். அதனை ராணி காமிக்ஸ் இரண்டு முறை போட்டதாக நினைவு. இப்போது என்னிடம் அந்த ராணி காமிக்ஸ் இல்லாததால் சரி பார்க்க இயலவில்லை. இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த பேணலில் "கும், கும்"  என்று வேறு எழுதி இருப்பார்கள்.

</> <>
</> <>
</> <>
</> <>
</> <>
</> <>
</> <>
</>
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 1
RomanticWitch-01
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 2
RomanticWitch-02
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 3
RomanticWitch-03
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 4
RomanticWitch-04
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 5
RomanticWitch-05
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 6
RomanticWitch-06
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 7
RomanticWitch-07
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 8
RomanticWitch-08
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 9
RomanticWitch-09
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 10
RomanticWitch-10
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 11
RomanticWitch-11
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 12
RomanticWitch-12
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 13
RomanticWitch-13
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 14
RomanticWitch-14
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 15
RomanticWitch-15
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 16
 
 
RomanticWitch-17
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 18
RomanticWitch-18
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 19
RomanticWitch-19
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 20
RomanticWitch-20
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மந்திரக்கள்ளி மாயம்: பக்கம் 21
RomanticWitch-21


பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

31 comments:

  1. சோதனை பின்னுட்டம்.

    ReplyDelete
  2. என்னடா இது நமக்கு வந்த சோதனை?

    சோதனை பின்னுட்டதோடே நம்ம கதை முடிந்து விடும் போல இருக்கிறதே?

    ReplyDelete
  3. நண்பர் புலா சுலாகி, பெயரிலேயே ஒரு வித்தியாசத்தை கடை பிடித்து விடீர்கள். கூடவே, யாவரும் பதியாத தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் பற்றி தான் உங்கள் வலைபூ என்று ஒரு தனித்துவம் வேறு. வாழ்த்துக்கள், தொடர்ந்து இப்படி அறிய தமிழ் காமிக்ஸ்களை இப்படி எங்களுக்கு அறிமுக படுத்துங்கள்.

    இந்திரஜால் நண்பர்கள் பலரின் வலைப்பூவில் நான் அதிகம் கேட்ட கேள்வி, தமிழில் சில இந்திரஜால் காமிக்ஸ்களை ஏன் நீங்கள் பதியவில்லை என்பது தான்? அந்த குறை இனி உங்கள் வலைபூ மூலம் தீரும்.

    இந்த கதையை நான் படித்தது ராணி கோமிச்சின் பேய் காடு மூலம் தான், என்றாலும் பிற்காலத்தில் இதை ஆங்கில பிரதியில் படித்து இருக்கிறேன்.. மாயாவி மேல் எனக்கு ஓரளவுக்கு வெறுப்பு தோன்ற வாய்த்த கதைகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் காமிக்ஸ் வெளி வந்த காலத்தின்படி இதுவும் ஒரு காமிக்ஸ் காவியமே... :)

    காமிக்ஸ் வலைபூ பதிப்புகளின் புது அங்கத்தினரை, எப்பவும் போல நான் மனமார வரவேற்கிறேன். பெரும்பான்யான காமிக்ஸ் பதிவர்கள் போல நீங்களும், உங்கள் வலைப்பூவில் காமிக்ஸ் பற்றி பதிவதோடு நிற்காமல், உங்கள் கருத்துக்களை சக காமிக்ஸ் பதிவர்கில் வலை ஏட்டிலும் அவ்வபோது கட்டாயம் பதிய வேண்டும் என்ற ஒரு அன்பு வேண்டுகோளுடன், விடை பெறுகிறேன்.

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  4. காமிக்கியல் தலைவர் ரபிஃக் ராஜா அவர்களுக்கு நன்றி.

    உங்கள் அன்பு வேண்டுகோளை சிரமேர்க்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. அருமை நண்பரே,

    முதலில் வருக வருக என்று உங்களை உளமார வரவேற்று, பூங்காவனத்தின் அன்பில் இணைய உங்களையும் அழைக்கிறேன்.

    பிரமாதமான இம்மொழிபெயர்ப்பை படிக்கும் போது ஜாலியாக உள்ளது. கதையை ஆறுதலாகப் படித்த பின்னும் என் கருத்துக்களைப் பதிவேன்.

    புலா சுலாகி என்றால் என்ன. தயவு செய்து கூறுங்கள்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்

    ReplyDelete
  6. திரு புலா சுலாகி அவர்களே,

    உங்களை காமிக்ஸ் வலை உலகிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். தாங்கள் தொடர்ந்து இந்திரஜால் காமிக்ஸ்'களை பதிவிட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றிகள் முன்கூட்டியே.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி திரு சங்கர் விஸ்வலிங்கம் அவர்களே.

    பார்த்திபன் நடித்த தமிழ் படம் "இவன்". அதில் திரு டி.பீ கஜேந்திரன் அவர்கள் மிகவும் குள்ளமாக இருப்பார்.அதற்காக அவர் மற்ற படங்களில் எல்லாம் உயரமாக இருப்பாரா என்று வினவ வேண்டாம். குடி போதையில் அவரை பார்த்து பார்த்திபன் "நீ எழுந்து நின்னு பேசு" என்பார்.

    அதற்க்கு அவர் "டேய், நான் நின்னுகிட்டு தாண்டா இருக்கேன்" என்பார். அப்போது அவரை பார்த்து காமெடியாக பார்த்திபன் சொல்லும் வார்த்தை தான் புலா சுலாகி. இதனை நையாண்டியாகவும் கொள்ளலாம். டபுள் மீனிங் ஆகவும் கொள்ளலாம்.

    ReplyDelete
  8. காமிக்ஸ் வலையுலகின் முடி சூடிய மன்னராகிய திரு கிங் விஸ்வா அவர்களே,

    வருகைக்கும் பதிவில் பின்னுஉட்டம் இட்டதற்கும் நன்றி.

    தங்களை காமிக்ஸ் என்னும் கடலில் மூழ்கடிக்க எனக்கும் விருப்பமே. கண்டிப்பாக மாதமிருமுறை பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  9. ஆகா அருமையான கதை,

    கண்ணாடி ஏன் கிங் விஸ்வாவைக் காட்டவில்லை!!!

    வேதாளரின் 1947ம் கதைகளை வைத்து ஒர் பதிவு இடும் எண்ணம் எனக்கு இருந்தது. வேதாளனின் கண்ணீர் என ஒர் முன்னோட்டம், அதில் ஒர் பாரில் வைத்து வேதாளனை நான் பேட்டி எடுப்பதாகவும், வேதாளன் பீரை ருசித்து குடிப்பதாகவும், டெவில் கலாட்டா பண்ணுவதாகவும் சிறு கற்பனை செய்திருந்தேன். ஆனால் இன்று வரை கைகூடவில்லை. வேதாளனின் உடான்ஸ் கேள்வி பதில் கூட செய்யலாமா என்று எண்ணினேன் உம்

    கே. வடு மாங்கா ஊறுதுங்கோ தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ இதனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
    வேதாளன். டெவிலுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

    இப்படி அதனையும் செய்யவில்லை. இன்று உங்கள் பதிவைப் படித்த போது அக்குறைகள் தீரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
    உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    விஸ்வாவை ஏன் கண்ணாடி காட்டவில்லை!!!!

    ReplyDelete
  10. ஷங்கர் அவர்களே,

    (விஸ்வாவை ஏன் கண்ணாடி காட்டவில்லை)

    கண்ணாடி விஸ்வா'வை காட்டாததால் தான் முடிவில் உடைந்து போனதாக சூனியக்காரி என்னிடம் கூறினாள். இப்போது நீங்கள் இப்படி வினவி அதனை உறுதி செய்து விடீர்கள்.

    ReplyDelete
  11. அண்ணே புலா சுலாக்கியன்னே,

    குமபுடுருனுங்கோ. ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்கோ? சவுக்கியமுங்க்களா?

    மத்தபடி பதிவு அட்டகாசமுங்கோ.

    //இந்த மந்திரக் கள்ளி மாயம் கதை தான் பேய்க் காடு என்பது தெரிந்து இருந்தால் சத்தியமாக அந்த ராணி காமிக்ஸ்'ஐ வாங்கியே இருக்க மாட்டேன்// இங்கேயும் அதே கதைதான்.

    //ராணி காமிக்ஸ் நிர்வாகத்தினர் இன்னும் ஒரு படி மேலே போய் இதிலும் சில பேனல்களை திரும்பவும் போட்டு இருப்பார்கள்// ஈ அடிச்சான் காபி கதைதான்.

    //இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த பேணலில் "கும், கும்" என்று வேறு எழுதி இருப்பார்கள்// இதனை பற்றி ஒலக காமிக்ஸ் ரசிகர் தன்னுடைய முதல் பதிவில் "மாயாவியின் குத்து கும்மாங்குத்து" என்று எழுதியதாக நினைவு.

    //கண்ணாடி ஏன் கிங் விஸ்வாவைக் காட்டவில்லை!!!// அப்ப நம்ம ஜோஸ் எல்லாரும் என்ன தலைமறைவாக இருந்தார்களா என்ன?

    ReplyDelete
  12. திரு புலா சுலாகி அவர்களே,

    பிடியுங்கள் பாராட்டுகளை. முதல் பந்திலேயே ஆறு ஓட்டங்கள்.

    இப்போ சவால் என்னவென்றால் இதை எப்படி தொடர போகிறீர்கள் என்பதுதான்.

    மொத்தமாக புத்தகத்தை போடுவதில் எனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும் உங்களை தமிழ் காமிக்ஸ் ப்லோக் உலகிற்கு அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து கலக்குங்கள்.

    முத்துவிசிறி

    ReplyDelete
  13. நண்பர் செழி,

    சிவப்பு காஸ்ட்யூம் கெட்டப்பில்,தாடி,ஸ்பெஸல் எஃபெக்ட் ஹெர் கட்டிங், ஒரு பல் மிஸ்ஸிங்கில் இருப்பது எனதருமை நண்பர் ஜோஷ் இல்லையா, ஐயகோ தசாவதாரம் தோற்றது போங்கள்.

    ReplyDelete
  14. இந்த கொடு சூலி குடு குடு மந்திரக்காரி கிழவி எனக்கருகே இருந்தா என் பெயரையே நான் மாத்திக்கலாமே, ஃப்ளீஸ் புலா சுலாகி கிவ் மீ ஹெர் அட்ரஸ். ஒ வாட் எ நைஸ் கிரியேட்சர் யா.

    ReplyDelete
  15. வயகரா தாத்தா அவர்களே,

    என்னுடைய அழைப்பை ஏற்று என்னுடைய புதிய வலைப் பூவிற்கு உங்களின் வருகைக்கும் கமெண்ட் பதிதமைக்கும் நன்றி.

    ReplyDelete
  16. காமிக்ஸ் வலையுலகில் தமிழ் காமிக்ஸ்'இக்கு என்று ஒரு தனி மரியாதையை உருவாகிய திரு முத்து விசிறி அவர்களே,

    உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. இந்த சவாலை நான் ஏற்று கொள்கிறேன். என்னுடைய அடுத்த பதிவில் உங்களையும் ஏனைய காமிக்ஸ் பதிவர்களையும் மகிழ்விக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  17. செழி அவர்களே,

    உங்களின் வருகுக்கும் மேம்பட்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்களின் "நக்கீர" பார்வையில் இருந்து படாமல் இருக்க நான் முயல்வேன்.

    ReplyDelete
  18. ஷங்கர் அவர்களே,

    //சிவப்பு காஸ்ட்யூம் கெட்டப்பில்,தாடி,ஸ்பெஸல் எஃபெக்ட் ஹெர் கட்டிங், ஒரு பல் மிஸ்ஸிங்கில் இருப்பது எனதருமை நண்பர் ஜோஷ் இல்லையா, ஐயகோ தசாவதாரம் தோற்றது போங்கள்//


    இவர்தான் ஜோஸ்'ஆ? என்ன கொடுமை இது? அவர் ஒரு கட்டிளம் குமரன் என்று எண்ணி இருந்த பல இளம் குமரிகளின் மனதை முறித்து விட்டீர்களே?

    ReplyDelete
  19. எல்லாம் தெரிந்த எனக்கு இந்த வயகரா தாத்தா யார் என்றே தெரியவில்லயே?

    ஒரு வேலை நம்ம சீனியர் ஜோஸ்'ஐ கேட்டால் தெரியுமோ?

    ReplyDelete
  20. நண்பர் புலா சுலாகி, முதல் பதிவிலேயே ஏகோபித்த காமிக்ஸ் ஆர்வலர்களின் வருகையை (முக்கியமாக முத்து விசிறி) பெற்று கொண்டதற்கு என் பாராட்டுக்கள். கதையை பற்றி நான் ஏற்கனவே என் கருத்தை பதிந்து விட்டதால், சற்று நேரம் விட்டு பதிவின் மற்ற விசயங்களை மீண்டும் படித்த பின்பு இடும் பிண்ணூட்டம் இது.

    // என்னிடம் மொத்தம் நூற்றி ஐம்பது இந்திரஜால் காமிக்ஸ் (தமிழ்) உள்ளது //
    அப்போது இனி காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு கொண்டாட்டம் தான் போங்கள். முழு புத்தகத்தையும் வெளியிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், முகமில்லா மாயாவியாக நீங்கள் இருப்பதினால் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பில்லை.

    // நான் மும்பையிலேயே பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம் //
    இதோ பாருடா, அப்ப சென்னை வாசிகள் சுத்த தமிழ் பேசி வாழும் கும்பலா என்ன? வாக்கிய அமைப்பு பிற்காலத்தில் ஜுணூண் தமிழ் என்று பரவலாக கிண்டல் செய்ததற்கு முன் மாதிரியாக இருந்ததே, எனக்கு தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மேல் உண்மையான காதல் தோன்றாமல் இருந்ததற்கு காரணம். என்னிடம் மொத்தமே 30 தமிழ் இந்திரஜால் பிரதிகளே இருப்பதற்கு காரணமும் அதுவே.

    // த காமிக்ஸ் புராஜெக்ட் //
    அவர் வலையகத்தில் இந்த பதிவிற்கு முறையாக ஒரு நன்றி தெரிவித்து விடுங்கள். த காமிக்ஸ் புராஜெக்ட் அன்பரும் ஒரு தமிழர் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஆனால் அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பதுதான் ஹைலைட்.

    // காமிக்கியல் தலைவர் ரபிஃக் ராஜா //
    காமடியை ரசித்தேன், அங்கு ஏது கூட்டணி? காமிக்கியலில் இருப்பது நான் ஒருவன் மட்டுமே. ஆகவே, டெக்னிகல்லி தொண்டணும் நானே, தலைவனும் நானே.

    // புலா சுலாகி என்றால் என்ன //
    சங்கர் அன்பரின் கேள்விக்கு சரியாக விளக்கம் குடுத்தீர்கள். அவர் எப்படியோ, நான் உங்கள் புனை பெயரை காமடியாகவே எடுத்து கொள்கிறேன் :).

    கும்மியடிக்க தாத்தா பாட்டி ஆவி ஆகிய அனைவருக்கும் இன்னொரு வலைத்தளம் கிடைத்து விட்டது போங்க. காதல் புறாக்கள் "காத்தவ்" மற்றும் "பூங்காவனம்" இங்கும் அவர்கள் காதல் கதைகளை தொடர வராமல் இருந்தால் சரி.

    கூடவே என் வேண்டுகோளை ஏற்று காமிக்கியல் வலையேட்டில் உங்கள் கருத்துகளை பதிந்தற்கும் நன்றிகள். முகம் தெரிந்த காமிக்ஸ் பதிவர்களே, இது வரை செய்யாத ஒரு காரியத்தை புதியவர் நீங்கள் செயல் படுத்துவதை நினைத்து மிகவும் பெரிமிதம் கொள்கிறேன். வாடிக்கையாக உங்கள் கருத்துகளை இனி வரும் பதிவுகளிளும் எதிர் பார்த்து கொண்டு இருப்பேன். நீங்களும் உங்களுடைய மாதம் இரு முறை பதியும் எண்ணத்தை கட்டாயம் தொடர வேண்டும்.

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  21. மீண்டும் வந்தமைக்கு காமிக்கியல் தலைவர் ரபிஃக் ராஜா அவர்களுக்கு நன்றி.

    நண்பரே, உங்கள் நல்லெண்ணத்தை நான் என்றும் பொய்க்க மாட்டேன்

    //அங்கு ஏது கூட்டணி? காமிக்கியலில் இருப்பது நான் ஒருவன் மட்டுமே. ஆகவே, டெக்னிகல்லி தொண்டணும் நானே, தலைவனும் நானே// தலைவரே, நான் ஒன்று கூறுவேன். கோபிக்க வேண்டாம். என்னுடைய கருத்து இது தான்: என்னதான் வாழ்க்கையில் அப்பா, அம்மா, சகோதர-சகோதரிகள், நண்பர்-நண்பிகள் இருந்தாலும், வாழ்க்கையில் நாம் எப்போதுமே தனியர்கள் தான். என்னதான் உறவுகளும், உரிமைகளும் இருந்தாலும் நான் இவ்வாறுதான் "பீல்" பண்ணுகிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும். நான் எப்போதுமே சற்று அதிக பிரசங்கியாக பேசிவிடுகிறேன்.

    ReplyDelete
  22. எங்கள் அணியை பற்றி தவறாக பேசிய உங்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் எங்கள் முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் அமைந்துஉள்ளது. எப்படி? இனிமேல் யாரும் இங்கே வந்த ஆஸ்திரேலியா பற்றி தவறாக கூறக் கூடாது. (அது என்னங்கடா கமெண்ட் = ஆஸ்திரேலியா முன்னால் பிரைம் மினிஸ்டர் கீட்டிங், ஆஸ்திரேலியா அணி சீட்டிங்)

    ரிக்கி பாண்டிங்.

    ReplyDelete
  23. எலேய் மூசு,

    மிஸ்.டகாமா கொத்தும் குலையுமா நின்னுகிட்டிருக்கா, நீ என்னன்னா பசங்களிற்கு கதை சொல்லிட்டிருக்க, டகாமாவட பாட்டிய நாம் 2 பேரும் டாவடிக்கிறத பொறுக்காத ஜோசுக் கிழவன் நம்பள காட்ட விட்டு ஒதுக்கி வச்சிருந்தானே ஞாபகமிருக்கா பாவி மக்கா.

    ReplyDelete
  24. வயகரா தாத்தா,

    இந்த வயசுல நீங்க பேசுற பேச்சா இது? நான் தான் இப்போது திருந்தி விட்டேனே? அந்த ஜோஸ் கிழவன் நம்மளை விட வயதில் எட்டு வயது பெரியவன் என்பதால் காட்டுக்கே நாட்டாமை மாதிரி பண்ணான். என்ன பண்றது?

    இப்போ அந்த ஜோஸ்'அ பாரு? பென்ஷன் வாங்கினாலும் இன்னமும் மார்கட்டுக்கு டூ வீலர்'ல தான் போறான். கேட்டா, சைக்கில் கூட டூ வீலர் தான்'ன்னு சொல்றான்.

    ReplyDelete
  25. எலேய் மூசு,

    திராட்ச்சைப்பழ தோட்ட அதிபர் கமெண்ட் போட்டிருக்காரு, கிழவன் ஜோஸ் முந்திரிப்பழங்கள குட்டிககிட்ட காட்டி மிரட்டுறானாம். வாலே நாங்க 2 பலாப்பழங்களோட போயி ஒர் கை பாத்திடுவோம். அடச்சே கிழவன இல்லப்பா குட்டிகளத்தான்.

    ReplyDelete
  26. Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.

    A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.

    ReplyDelete
  27. From The Desk Of Rebel Ravi:

    Dear comics fan (pula sula ki - what a name),

    thanks a ton. i used to wonder why there was no indrajal blog in tamil and you have made it a reality.

    Rebel Ravi,

    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  28. யாருப்பா அது ரெபல் ரவி? வருகைக்கும் பதிவில் கமெண்ட் இட்டதற்கும் நன்றி. உங்க பெயர் கூட வித்தியாசமாதான் இருக்கு.

    ரவீந்தர்: கிரிக்கெட் விஷயத்தை அப்டெட் செஞ்சதுக்கு நன்றி. (அப்படின்னு சொல்லாம் என்று பார்த்தல் எல்லா பிளாகுளையும் இதே கமெண்ட் இருக்கு).

    அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ரெக்வஸ்ட்: முடிஞ்சா தமிழிலேயே கமெண்ட் போடுங்களேன்?

    மூசு தாத்தா, வயகரா தத்தா உங்க ரெண்டு பேருக்கும் நன்றி.

    ReplyDelete
  29. இப்போ சவால் என்னவென்றால் இதை எப்படி தொடர போகிறீர்கள் என்பதுதான்.

    ReplyDelete
  30. நண்பரே இது போன்று இன்னும் கதைகள் எதிர் பார்க்கிரேன் நன்றி

    ReplyDelete
  31. ரொம்ப வருடத்திற்கு பிறகு மாயாவி கதைகளை பற்றி நினைவுபடுத்தும் பக்கம். School days ல Pocket money ய மிச்சம் செஞ்சு, Friends கூட Share செஞ்சு வாங்கி படித்தது நியாபகப்படுத்துகிறது. Pdf Fileஆ இருந்தா Send பன்னுங் சார்

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin