என்னுடைய முதல் பதிவை வெற்றி பதிப்பாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நண்பர் ரபிஃக் ராஜா அவர்களுக்கும் முத்து விசிறி அவர்களுக்கும், ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்களுக்கும்..... அட இப்படி சொல்லிக் கொண்டே போனால் கமெண்ட் இட்ட அனைவரையும் குறிப்பிட வேண்டும், அது சற்று சிரமமான காரியம் என்பதால் இந்த மூவர்க்கு மட்டும் எனது சிறப்பு நன்றிகள்.
பதிவுலக நண்பர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எனக்கு இனையதளங்களில் பிரவுஸ் பண்ண வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே முடிகின்ற காரணத்தினால் அவரவர் பதிவுகளில் என்னால் உடனுக்குடன் கமெண்ட் இட இயலாது. அதுவும் இல்லாமல் என்னால் அடிக்கடி பதிவும் இட இயலாது. மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று பதிவுகள் வரை இட முயற்சி செய்கிறேன். (மாதமிருமுறை என்பதே சரியாக இருக்கும்). ஆகையால் தயைகூர்ந்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
Thank You pula-sulaki. I like this very much.
ReplyDeleteI saved all images and converted to pdf. thank u again
நண்பரே,
ReplyDeleteப்ளாஷ் கோர்டன் கதைகள் சிறுவயதில் மனதில் ஏற்படுத்திய கனவுகள் ஏராளம். எத்தனை உலகங்கள், வினோத மனிதர்கள். மிங் மகராஜ்ஜைப் பார்க்கும் போது டாக்டர் செவன் நினைவிற்கு வருகிறார்.
முழுக்கதையையும் வெளியிட்டு மகிழ்ச்சி கடலில் எங்களை மீண்டும் மூழ்கடித்து விட்டீர்கள். முழுக்கதையையும் படிக்கவில்லை ஆனால் ஆரம்ப பக்கங்கள் விறுவிறுப்பாக இருந்தன.உங்கள் கால வசதிக்கேற்ப பதிவுகளை இடுங்கள், என் ஆதரவு உங்களிற்கு உண்டு.
உங்களிற்கு பிள்ளைகள் உண்டா என நான் வயக்கரா தாத்தாவைக் கேட்ட போது, இப்போது ஒன்று தயாரிப்பில் உள்ளதாக பதிலளித்தார்.
இதோ ஜாக் லண்டன் பற்றி அறிய ஆங்கிலமொழிச் சுட்டி.
http://en.wikipedia.org/wiki/Jack_London
உற்சாகத்துடன் தொடருங்கள்.
கதையில வரும் ஆம்பளங்கள செக்ஸியான ட்ரெஸ்ஸில் காட்டியும், அற்புதமான நிலவுகளை முழுக்க மூடியும் வரைந்துள்ள சித்திரக்காரரை என்ன செய்யலாம், சொல்லுங்க பேராண்டிகளா.
ReplyDeletenice story. thanks pula sulaki for the complete comics.
ReplyDeleteசுலாகி நண்பரே, ப்ளாஷ் கார்டன் என்னுடைய சிறு வயது காமிக்ஸ் நியாபகங்களிள் என்றும் தங்கும் ஒரு ஹீரோ. வேதாளருக்கு அடுத்து நீங்கள் அவர் கதை தேர்ந்தெடுத்து இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது. தூரத்து கிரகங்கள், தேசங்கள், விந்தை மனிதர்கள், வான் ஊர்திகள் என்று அவர் கதையில் வராத கற்பனை நிறைந்த காட்சிகள் என்றும் மறக்க முடியாத ஒன்று. அது மாயஜால வாள் கதையிலும் நிறைந்து இருக்கிறது. இந்த கதையை நான் முன்பு ஒரு முறை ஆங்கில இந்திரஜாலில் படித்த நியாபகம். மீண்டும் படிக்க வழீ ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteமாங்கோ கிரகம் கிட்டதட்ட ரஷியா போலவே உருவாக்க பட்டிருக்கும். முடியாட்சி, பனி படர்ந்த பிரதேசம், கட்டிட அமைப்பு எல்லாவற்றும் அதை பறைசாற்றும் படியே அமைத்து இருப்பார்கள். அமெரிக்க கதாநாயகனான ஃபளாஷ் கார்டனின் கதைகளிள் வேறு எப்படி சித்தரித்து இருக்க போகிறார்கள். இந்திரஜால் காமிக்ஸில் கதைகைளை நமது ராணி காமிக்ஸ் போல கூறு போடுவது மிகவும் பிரசிதம். இதனாலயே கதை கட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருப்பது போல தெரியும்.
ஆனால் எப்போதும் ஆர்பாட்டமாக அறிமுகம் ஆகும் மிங் சக்கரவர்த்தி ஒவ்வொரு கதை முடிவிலும் கோமாளி போல சித்தரிக்கபடுவது ஃப்ளாஷ் கதைகளில் மிகவும் காமடியான ஒன்று. இந்த கதையிலும் அவர் உயிருக்கு பயந்து அந்தரத்தில் ஊசலாடி கொண்டிருப்பதே அதற்கு சான்று.
நூலக முத்திரையில் ஒரு நாள் மட்டும் என்று குத்தி உள்ளதே. திருப்பி குடுக்கவில்லையா ? இல்லை விலை குடுத்தே வாங்கி விட்டீர்களா. ஏனென்றால் நூலகங்களில் நான் காமிக்ஸ் புத்தகங்களுக்காக பெரிய சண்டையே போட்டு உள்ளேன். பொதுவாக அவர்களுக்கு ஒரு புத்தகத்தை விலைக்கு விற்பதை விட, வாடகை இடுவதில் லாபம் அதிகம் என்பதால். உங்களுக்கும் அந்த அனுபவம் கண்டிபாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த முறை படங்களின் சுட்டிகள் தவறாக இன்னும் சின்ன விகிதாசர அளவிலேயே இட்டு செல்கிறது. நேரம் கிடைக்கும் போது அதை சரிபடுத்துங்கள்.
ஆமாம் உங்கள் பதிவிகளின் இடையே நீங்கள் நிறைய வெற்று இடைவெளி எதற்கு விடுகிறீர்கள். போன பதிவில் கூட அப்படி பார்த்த நியாபகம். அந்த இடங்களில் பிற்பாடு ஏதாவது சேர்க்க உத்தேசமா, இல்லை தற்செயலாக நேர்ந்ததா ?
மற்றபடி மற்ற அன்பர்கள் பதிவு இட்ட உடனே நீங்கள் கருத்தை பதிய எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் கால அவகாசம் போல பதியலாம். ஆனால் கண்டிப்பாக பதிய மறவாதீர்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். முத்து காமிக்ஸ் கிடைத்து விட்டதா ?
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராகா
புலா சுலாகி அவர்களே,
ReplyDeleteஅருமையான பதிவு. நீங்கள் உங்களுடைய பதிவை இடும்போது லே-அவுட் பற்றியும் சற்று யோசியுங்கள். அருமையான பதிவில் இது ஒரு இடைஞ்சல் போல இருக்கிறது.
நல்ல பதிவு. நீங்கள் ரசித்த அனைத்து விஷயங்களும் மற்ற அனைவரும் ரசிக்கும்படி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அந்த மிங் கேட்கும் கேள்வி (எனக்கு மகன் இருப்பது உண்மையா?).
தொடருங்கள் உங்கள் அதிரடியை. முத்து விசிறியின் பாணியில் சொல்வதானால் ஏற்கனவே முதல் பந்தில் ஆறு ஓட்டங்களை அடித்த நீங்கள், இப்போது இரண்டாம் பந்திலும் ஆறு ஓட்டங்களை அடித்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். இந்த அதிரடி தொடருமா?
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
COOOOOOOOOOOOOOOOOOOOOL
ReplyDeleteRAVI
hey friend what happened,
ReplyDeleteI am waiting for your next post.
Hi Dude,
ReplyDeleteAnother great comic is uploded by you. Thanks...
Keep up the good work.
Regards,
Mahesh
Hai i am krieshna from (CYPRUS) i like tamil comics boks can u add Ranicomics books (please)
ReplyDelete