
அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய முதல் பதிவை வெற்றி பதிப்பாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நண்பர் ரபிஃக் ராஜா அவர்களுக்கும் முத்து விசிறி அவர்களுக்கும், ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்களுக்கும்..... அட இப்படி சொல்லிக் கொண்டே போனால் கமெண்ட் இட்ட அனைவரையும் குறிப்பிட வேண்டும், அது சற்று சிரமமான காரியம் என்பதால் இந்த மூவர்க்கு மட்டும் எனது சிறப்பு நன்றிகள்.
பதிவுலக நண்பர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எனக்கு இனையதளங்களில் பிரவுஸ் பண்ண வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே முடிகின்ற காரணத்தினால் அவரவர் பதிவுகளில் என்னால் உடனுக்குடன் கமெண்ட் இட இயலாது. அதுவும் இல்லாமல் என்னால் அடிக்கடி பதிவும் இட இயலாது. மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று பதிவுகள் வரை இட முயற்சி செய்கிறேன். (மாதமிருமுறை என்பதே சரியாக இருக்கும்). ஆகையால் தயைகூர்ந்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.
இப்போது நமது தற்போதய பதிவிற்கு வருவோம்: மாயாஜால வாள். நான் படித்த முதல் பிளாஷ் கார்டன் கதை.சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்த புத்தகத்தை நான் தொலைத்துவிட்டேன். அப்போதிலிரிந்து சற்று மன வருத்தமுடன் இருந்த எனக்கு நான்கு வருடங்களுக்கு முன் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்னை வந்து இருந்தபோது ஒரு நூலகத்தில் கிடைத்தது. மகிழ்ச்சிகடலில் திளைத்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
இந்த கதையை இரண்டு மூன்று முறை கூர்ந்து படியுங்கள். நீங்களும் இந்த கதையை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். குறிப்பாக இந்த கதையின் நாயகன் யு-லன் மீது உங்களுக்கும் ஒரு லயிப்பு வந்த விடும். மஹாபாரத கதையில் கர்ணன் பாத்திரத்தை விட யு-லன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது என்றால் அது மிகையில்லை. இந்த கதையை எழுதியவர் கண்டிப்பாக மிங் கிரகத்தை ரஷ்ய நாட்டை போல நினைத்து எழுதி இருப்பாரோ என்று எனக்கு பல முறை சந்தேகங்கள் வருவதுண்டு.
மனைவி என்றால் கிள்ளுக்கீரையா? (முதல் பக்கம்) என்று ஆரம்பித்து பல வசனங்கள் நம்மை சிரிக்க வைத்தாலும் இது ஒரு சிறப்பான கதை என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். சரி, சரி இப்போது நம்முடைய களத்திற்கு வருவோம் - யு லன் என்ன தவறு செய்து விட்டான்? அநீதி இழைக்கப் பட்டதால், தன்னுடைய தாயை காப்பாற்ற அரசை கைப்பற்றினான். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிளாஷ் கார்டன் காதலி டேல் கூறுவாள்: "இதுவரை கழுத்து வெட்டோ, களையெடுப்போ இல்லை, அப்பா கூட உயிரோடு தான் இருக்கிறார்". இதில் இருந்தே அவன் ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒரு கட்டத்தில் பிளாஷ் கார்டன் கூட அவனுடைய மேதாவிலாசத்தை கண்டுவியப்பார் (மேதாவி, அப்பன் மிங்ஐ விட ஆபத்தானவன் மகன்). இப்படி இருக்கும் அவனை வெல்ல வழி தேடிக் கொண்டு இருக்கும்போது தான் ஒரு குரு வந்து அந்த மந்திர வாளின் ரகசியத்தை கூறிவிட்டு செல்வார். அதன்மூலமே யு-லன் தோற்கடிக்கப்படுகிறான்.(ராமாயணத்தில் வாலி வதை கூட இப்படிதானே).
இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் எனக்கு பல லயன் காமிக்ஸ் கதைகளை நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக கடைசி பக்கத்தில் பறக்கும் படை மூலம் இரண்டு வீரர்கள் மிங்ஐ ஒரு கோபுரத்தின் மேல் விடும் காட்சியை பார்த்தல் லயன் காமிக்ஸ் இதழில் லாரன்ஸ் டேவிட் தோன்றும் "கோடீஸ்வரர் கடத்தல்" என்ற கதியின் ஆரம்பம் நினைவுக்கு வரவில்லையா?
அதைப் போலவே இந்த மந்திர வாழை பற்றி பேசும்போது, ஒரு டெக்ஸ்வில்லர் கதையில் வில்லன் ஒருவன் துப்பாக்கியை உறையில் இருந்து எடுக்காமலே சுடுவது ஏனோ நினைவுக்கு வருகிறது. என்ன சம்பந்தம் என்று எனக்கே புரியவில்லை.
ஆனால், பத்து, பதினைந்து வருடங்கள் ஆனாலும் எனக்கு மறக்காத ஒரு சம்பவம் என்னவென்றால் மிங் தன்னுடைய மந்திரியிடம் கேட்கும் இந்த கேள்வி தான்: "எனக்கு மகன் இருப்பது மெய்தானா?". இந்த கேள்விக்கு மந்திரியின் பதில் இன்னும் கூட சிரிப்பை வரவழைக்கும்: "ஏகப் பட்ட பிள்ளைகள் உண்டு. பதிவு ஏடுகளில் தெளிவில்லை".
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 1 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 2 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 3 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 4 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 5 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 6 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 7 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 8 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 9 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 10 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 11 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 12 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 13 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 14 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 15 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 16 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 17 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 18 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 19 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 20 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 21 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 22 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 23 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 24 |
|
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் மாயாஜால வாள்: பக்கம்: 25 |
|
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.