Monday, April 6, 2009

வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உங்களின் மேலான ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.

வழக்கம் போல ஒரு இந்திரஜால் காமிக்ஸ் பதிவிடலாம் என்று என்னுடைய புதிய ஸ்கான் செய்யும் கருவியை எடுத்தேன். அப்போது தான் இந்த புத்தகம் கையில் கிடைத்தது. இதனை நான் வாங்கிய நியாபகமே இல்லை. சற்று யோசித்து பார்த்த பின்னர், இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை வந்து இருந்த போது அங்கே திரு முருகன் அவர்கள் கொடுத்த புத்தகம் என்பது நியாபகம் வந்தது. இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றிய விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் தலைவர் திரு முத்து விசிறி அவர்கள் இதனைப் பற்றி ஒரு பதிவு இட்டு உள்ளார்.அங்கு சென்றால் நீங்கள் வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அந்த பதிவுக்கான சுட்டி இங்கே: முத்து விசிறி

வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் இரண்டு வரிசையில் வந்தது. ஒன்று மாயாவி மற்றது டார்ஜான். மாயாவி கதைகள் வெறும் கருப்பு வெள்ளையில் வந்தது. விலை ஒரு ருபாய் ஐம்பது காசுகள். வெளி வந்த ஆண்டு 1972 முதல் 1975 வரை. ஆனால் டார்ஜான் கதைகளோ இரு வண்ணத்தில் அதே விலையில் வந்தது.

என்னிடம் இருக்கும் இந்த டார்ஜான் புத்தகத்தில் இரண்டு டார்ஜான் கதைகள் இருக்கின்றன. முதல் கதை இதோ:

 

வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 1
1
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 2
2
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 3
3
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 4
4
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 5
5
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 6
6
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 7
7
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 8
8
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 9
9
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 10
10
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 11
11
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 12
12
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 13
13
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 14
14
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 15
15
வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான் - காட்டின் பூதம் – பக்கம்: 16
16

இனிமேல் கதையின் மற்ற விஷயங்களை கவனிப்போம். இந்த கதையில் வேறு என்ன விஷயங்கள் இருக்கும் என்றா  நினைக்கிறீர்கள்? தொடர்ந்து படியுங்கள்.

மல்யுத்தம் - மல்லயுத்தம்

Malla Yudham

 ஆங்கிலம் தமிழ் Soon  உடனேயே
English Overlapping Tamil
மாறிய பலூன்கள்
Baloon Wrong Placement

இந்திரஜால் காமிக்ஸ் தமிழாக்கம் பற்றி கிண்டல் செய்யும் நண்பர்கள் வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஏற்கனவே முத்து விசிறி அவருடைய வலைப் பூவில் இதனைப் பற்றி விரிவாக எழுதி இருப்பார். அதனால் நானுன் அதனை பற்றி எழுத விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் என்னாலேயே என்னை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அதனால் தான் இந்த காட்சியை பார்க்கும்படி கேட்கிறேன்.

மல் யுத்தம் எப்படி மல்ல யுத்தம் ஆனது என்பதை நம்முடைய கேரளா நாட்டு நண்பர்கள் தான் தெரிவிக்க வேண்டும். என்னுடைய அண்ணன் கூறும் லாஜிக் என்னவென்றால் இந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் தான் இந்திரஜால் காமிக்ஸ் இதழ்களுக்கும் பெயர்ப்பாளர் என்று. என்னால் அதனை நம்ப இயலவில்லை. எனென்றால் இந்திரஜால் காமிக்ஸ் கதைகளில் தமிழ் மொழி சற்று இடம் மாறி இருக்கும். அதனை தவிர வேறு எந்த பிழையும் இருக்காது (இது கொஞ்சம் இல்லை, ரொம்ப ஓவர்). ஆனால் அவர்கள் இது போல பிழைகளை செய்ய மாட்டர்கள்.

நம்முடைய லயன் மற்றும் முத்து காமிக்ஸ் கதைகளில் சில பல இடங்களில் ஒரிஜினல் ஆங்கில வசனங்களை அழிக்காமல் அதம் மேலோ அல்லது அருகிலோ தமிழ் வசனங்களை வெளியிட்டு இருப்பார்கள். அதனைப் போலவே இதோ இந்த கதையிலும் ஒரு கட்டம்.

அடுத்ததாக இன்னும் ஒரு விஷயம். இந்த கட்டத்தில் பார்த்தால் காரக் சிரிப்பது போல இருக்கும். ஆனால் வசன பலூனோ டார்ஜானை நோக்கி இருக்கும். இதனை போன்ற தவறுகள் வெகு சில இதழ்களிலே இருக்கும். இந்த மாதிரி தவறுகளை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. வேறு யாதாவது காமிக்ஸ் இதழ்களில் இது போன்ற தவறுகள் இருந்தால் பின்னுட்டத்தில் சுட்டிக் காட்டுங்கள் தோழர்களே.

இந்த புத்தகத்தின் உள் அட்டையில் இருந்த இந்த படத்தை பாருங்கள். இதனை எங்கோ பார்த்த நியாபகம் இருக்கிறதே என்று யோசித்தால், வாசு காமிக்ஸ் இதழ்க பற்றி நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஒருமுறை தன்னுடைய தலை சிறந்த காமிக்ஸ் வலைப் பதிவில் இட்ட பதிவு தான் இதற்க்கு மூலம் என்பது தெரிந்தது.

 

வித்யார்த்தி மித்ரன் - தமிழ் காமிக்ஸ் – டார்ஜான்- புத்தக விபரம் - Credits
inner cover
வாசு காமிக்ஸ் - ஒலக காமிக்ஸ் ரசிகரின் இணையதளத்திலிருந்து எடுத்த படம்
Karumalai Theevu

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

23 comments:

  1. நண்பர் புலா சுலாகி அவர்களே,

    பொக்கிஷங்களை ரசிகர்களின் பார்வைக்கு வைப்பதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது.

    இக்கதைகள் வந்த ஆண்டைப் பார்க்கும் போதே இவை கலெக்‌ஷன்களில் இடம் பெறும் அரிய இதழ்கள் என்றே தோன்றுகிறது.

    ஆனால் பின்பு, இன்னுமொரு டார்ஜான் காமிக்ஸ் வெளிவந்தது, அதிக இதழ்களில்லை. ஆனால் சிறப்பான ஓவியங்கள். நல்ல மொழி பெயர்ப்பு, பெரிய அளவில் வந்தது என்று நினைக்கிறேன். அதில் ஒர் கதையில் டார்ஜான், கடலடியில் ஒர் ஆக்டோபஸுடன் மோதும் காட்சி மட்டும் நினைவில் உள்ளது. அக் கதைகள் கிடைத்தால், நண்பரே தயங்காது பதிவிடுங்கள்.

    நீங்கள் கூறியவாறே மொழி பெயர்ப்பு சொல்லிக் கொள்ளும் படி இல்லை. சித்திரங்களும் சுமார் ரகமே. கதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா. ஆனால் 1972-1975 களில் இக்கதைகள் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

    மிக அக்கறையாக பதிவுகளை வெளியிட்டு எங்களை மகிழ்விக்கும் உங்களிற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  2. அருமையான தேர்வு. இந்த புத்தகம் உண்மையிலேயே ஒரு பொக்கிஷம் தான்.

    காமிக்ஸ் வேட்டையர்கள் என்ன விலை வேண்டுமானாலும் தருவார்கள்.

    வாழ்த்துக்கள். என்ன, நான் தான் என்னுடைய சைட் பாரில் உங்கள் பெயர் போடாமல் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் என்று போட்டு இருந்தேன்.

    இப்போது அதனை மாற்ற வேண்டும் போல இருக்கிறது.

    இந்த புத்தகத்தின் இரண்டாவது கதை எங்கே?

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  3. சொல்ல மறந்து விட்டேன். ஸ்கான்'கள் எல்லாமே அருமை.

    பழைய (முப்பத்தி ஐந்து வருடங்ககுக்கு முந்தையது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டர்கள்) புத்தகமாக இருந்தாலும் நல்ல தரத்துடன் உள்ளன.

    புதிய ஸ்கானரா?

    புது ஸ்கனெர், புது பதிவு, கலக்குறீங்க புலா சுலாகி.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  4. அருமையான பதிவு புலா சுலாகி அவர்களே !. அதிலும் ஸ்கேன் அருமையோ அருமை . ஒரு வேண்டுகோள் - உங்களுடைய மற்ற பதிவுகளும் ஒரே பக்கத்தில் இருப்பதால் அனைத்து படங்களும் லோட் ஆக சிறிது அதிக நேரம் எடுப்பதாக எனக்கு படுகிறது . என் இணைய இணைப்பு வேகத்தால் இப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை . நீங்கள் ஒரு பக்கத்தில் ஒரு பதிவு என வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

    லக்கி லிமட் - Lucky Limat

    ReplyDelete
  5. Nice post. I used to collect these Vidyarthi Mithram Tarzan comics in English in the 70s and this post brought back some fond memories. Thank you.

    Also, is it possible to post a zip file with all the pages in mediafire?

    ReplyDelete
  6. அஹா .... இந்த பதிவு முந்தய பதிவுகளை விட மீகவும்அருமையாக இருக்கிறது. நான் இது வரை வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றி கேள்விப்பட்டது இல்லை. மிக அருமையான பதிவு.... எங்களுக்கு வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் அறிமுக படுதியத்கு மீகவும் நன்றி.... மேலும் இது மாதிரி கதைகளை அறிமுக படுத்துங்கள் ..... காமிக்ஸ் ப்ரியைர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.......

    ReplyDelete
  7. வயக்கரா தாத்தாApril 7, 2009 at 12:37 PM

    பேராண்டி புலா சுலாகி,
    6ம் பக்கத்தில, கடைசிக் கட்டத்துக்குள்ளே, அம்சமா சில நிலவுகள் நிக்குதே, அதைக் கொஞ்சம் பெரிசா போட்டிருக்க கூடாதா. இந்தக் கிராமத்திற்கு எப்படிப்பா போறது, யாரிற்காவது வழி தெரியுமா.ஸ்கேன்ஸ் சூப்பரு பேராண்டி. ஒர் பூங்காவனம் ஸ்கேன் போடுப்பா. நீ மவராசனா இருப்ப.

    ReplyDelete
  8. நண்பர் புலா சுலாகி அவர்களே,
    அருமையான பதிவு. A4 SIZE இல் தமிழ் காமிக்ஸ் பார்ப்பதே அட்டகாசமான அனுபவம். அட்டை படத்தை போடா காணோம்.

    ReplyDelete
  9. Dear Pula Sulaki,

    Thanks for this wonderful scan. I was on the lookout for the Tarzan issues, but my close circle couldn't lay their hands on these issues so far.

    Yes, the quality of translation is pretty bad. Worse than Tamil Indrajal as mentioned in the post. I remember seeing some more Tamil comics published from Kerala, with similar quality translation. All historical stories, it was like reading vadakkan veerakatha(Mammooty movie) in comic form.Anyone remember this?

    Regards,
    Muthufan

    ReplyDelete
  10. சுலாகி அன்பரே புதிய ஸ்கானர் வாங்கிய கையுடன் அற்புதமான பதிவோடு மீண்டும் வந்திருக்கிறீர்கள். டார்ஜான் ஸ்கான்கள் டாப் டக்கர் ரகம். பிற்காலத்து டார்ஜான் சித்திரங்களோடு, அதற்கு முன் வெளியான டார்ஜான் கதைகளில், அந்த கதையோட்டத்துடன் கலக்கும் ஒரு வித பழமை தன்மை இந்த கதை தொடரில் அருமையாக பார்க்க முடிகிறது. ஆனாலும் சித்திர தரம் சுமார் ரகமே. கூடவே டார்ஜான் சித்திர கதை தொடர்கள் சில மட்டுமே நல்ல கதையம்சம் கொண்டு இருக்கும், இது அந்த பலவற்றில் ஒன்று போல தெரிகிறது. நாவல்களை சிறப்பான முறையில் சித்திர தரத்திற்கு கொண்டு வர முடியாது என்பதற்கு இவை உதாரணம்.

    வித்யார்த்தி மித்திரன் பற்றிய அறிமுகம் முத்து ஃபேனின் வலைத்தலத்தின் மூலம் கிடைத்தது. மாயாவியை தவிர அவர்கள் டார்ஜான் கதைகளையும் வெளியுட்டிருந்தார்கள் என்று தங்கள் இந்த பதிவு மூலம் அறிந்தேன். அவர்கள் மொத்தம் எத்தனை புத்ககங்கள் வெளியிட்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

    வித்யார்த்தி மொழியாக்கம் பற்றி நான் என்ன கூற இருக்கிறது. தமிழ் கொலை என்று தெளிவாக தெரிவாக தெரிகிறது. ஒரு வேளை முத்து, லயன் மற்றும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் காமிக்ஸ் என்ற ஒரு பெருமைக்கே பெரிய பங்கம் வெளி வந்து இருக்கலாம்.

    ஆமாம், முக்கியமாக அட்டை படத்தை விட்டு விட்டீர்களே... மறதியா இல்லை அட்டை இதற்கு இல்லையா... இருந்திருந்தால் அட்டை தரத்தையும் பார்த்து இருந்து இருக்கலாம்.

    சென்னை முருகன் என்று நீங்கள் கூறியது RT முருகனைதானே? நண்பர் ஒரு காமிக்ஸ் கிட்டங்கி, அவரிடம் இல்லா புத்தகங்களே கிடையாது என்று மீண்டும் நிருபித்து இருக்கிறார்.

    தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  11. நண்பர் ஷங்கர் விஸ்வலிங்கம்,

    //பொக்கிஷங்களை ரசிகர்களின் பார்வைக்கு வைப்பதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது// மிக்க நன்றி.

    //கலெக்‌ஷன்களில் இடம் பெறும் அரிய இதழ்கள் என்றே தோன்றுகிறது// என்னுடைய நண்பரின் கூற்றின்படி சென்னையில் மொத்தம் ஐந்து அல்லது ஆறு பேரிடம் தான் இந்த புத்தகங்கள் உள்ளன.

    //கடலடியில் ஒர் ஆக்டோபஸுடன் மோதும் காட்சி// மன்னிக்கவும். என்னிடம் இல்லை.

    உங்களின் மதிப்பை பெற்றது எனக்கும் மகிழ்வே.

    புலா சுலாகி,
    கவலைக்கேது பேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  12. நண்பர் கிங் விஸ்வா,

    //என்னுடைய சைட் பாரில் உங்கள் பெயர் போடாமல் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் என்று போட்டு இருந்தேன்.இப்போது அதனை மாற்ற வேண்டும் போல இருக்கிறது.//

    உங்களுக்கு கடினமாக இருந்தால் சொல்லுங்கள், இனிமேல் வெறும் இந்திரஜால் மட்டுமே இடுகிறேன்.

    மன்னிக்கவும், ஒரு நகைவுக்காக அப்படி கூறினேன். என்னிடம் இன்னமும் சில கணக்கில் வராத காமிக்ஸ்'கள் உள்ளன. அவற்றை இடலாமா?

    //இந்த புத்தகத்தின் இரண்டாவது கதை எங்கே?// இருக்கிறது. இன்னமும் ஸ்கான் செய்ய வில்லை. விரைவில் இடுகிறேன். இடலாமா?

    //புது ஸ்கனெர், புது பதிவு, கலக்குறீங்க புலா சுலாகி// உங்கள் துறையை நிரூபிக்கிறீர்கள். மறந்து விட்டேன், ஆறாம் ஆண்டு விழா வாழ்த்துக்கள்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  13. நண்பர் லக்கி லிமட்,

    இப்போது உங்கள் பெயர் நல்ல ரய்மிங் ஆகா உள்ளது.

    //நீங்கள் ஒரு பக்கத்தில் ஒரு பதிவு என வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்// அப்படியே ஆகட்டும் பிரபு. நீங்கள் சொல்லி நான் செய்யாமல் இருந்தால் எப்படி. செய்து விட்டேன். இப்போது சரியாக உள்ளதா என்று பாருங்கள்.

    //அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்// நன்றி. உங்கள் ஆவலை பூர்த்தி செய்யுமாறு ஒரு பதிவிட முயல்கிறேன்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  14. நண்பர் BN_USA,

    //Nice post// Thank You.


    //this post brought back some fond memories// Again, Thanks.

    //is it possible to post a zip file with all the pages in mediafire?// As mentioned in the beginning, i go to internet parlour only once in a week and am a geek when it comes to uploading and downloading. My niece helped my out on Blogging tips.

    by the way, the scans are of high resolution and good quality and you can right click on the picture and save them and then convert them into a JPEG as limat does.

    Can you tell me how to upload this into media file? i will try.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  15. நண்பர் ரமேஷ்,

    //இந்த பதிவு முந்தய பதிவுகளை விட மீகவும்அருமையாக இருக்கிறது// மிக்க நன்றி.

    //நான் இது வரை வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றி கேள்விப்பட்டது இல்லை// இந்த இடுகையில் எங்கள் தலைவர் திரு முத்து விசிறி அவர்கள் வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றி இட்ட பதிவின் சுட்டி இருக்கிறது. படியுங்கள்.

    //மேலும் இது மாதிரி கதைகளை அறிமுக படுத்துங்கள்// கண்டிப்பாக.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  16. நண்பர் வயக்கரா தாத்தா

    //6ம் பக்கத்தில, கடைசிக் கட்டத்துக்குள்ளே, அம்சமா சில நிலவுகள் நிக்குதே, அதைக் கொஞ்சம் பெரிசா போட்டிருக்க கூடாதா// அடுத்த முறை முயல்கிறேன்.


    //இந்தக் கிராமத்திற்கு எப்படிப்பா போறது, யாரிற்காவது வழி தெரியுமா// வெறும் டார்ஜானுக்கு மட்டும் தான் தெரியுமாம்.

    //ஸ்கேன்ஸ் சூப்பரு பேராண்டி// நன்றி,

    //ஒர் பூங்காவனம் ஸ்கேன் போடுப்பா. நீ மவராசனா இருப்ப// அவரின் படங்கள் தான் இப்போது ஓடுவது இல்லையே? நான் இப்படியே இருந்து விடுகிறேனே?

    நீங்கள் கூறியது இயக்குனர் மவராசன் பற்றி தானே?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  17. நண்பர் சிவ,

    //அருமையான பதிவு// நன்றி.

    /A4 SIZE இல் தமிழ் காமிக்ஸ் பார்ப்பதே அட்டகாசமான அனுபவம்// ஆனால் அந்த அளவில் வந்த காமிக்ஸ் எதுவும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை, இந்திரஜால் தமிழ் பதிப்பு உட்பட.

    //அட்டை படத்தை போடா காணோம்// ஏகப்பட்ட இடங்களில் கிழிந்து உள்ளது. அதனை சித்து வேலைகள் செய்து இப்போதுதான் முடித்தேன். அவசரம் காரணமாக வெளியிட முடிய வில்லை. அடுத்த முறை இட முயல்கிறேன்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  18. வயக்கரா தாத்தாApril 8, 2009 at 4:24 PM

    பேராண்டி புலா சுலாகி, டார்சானு ஆம்பளப் பசங்கள சும்மா விட மாட்டான், அவன் கெட்டப்பை பாத்த பிறகும் அவன்கிட்ட போய் நான் இந்த கிராமத்திற்கு வழி கேட்டா, என்ன நடக்குமின்னு எனக்கு நல்லாத் தெரியும். வேண்டாம்பா இந்த விபரீத விளையாட்டு.

    ReplyDelete
  19. புலா சுலாகி,

    //உங்களுக்கு கடினமாக இருந்தால் சொல்லுங்கள், இனிமேல் வெறும் இந்திரஜால் மட்டுமே இடுகிறேன்// இதுவும் ஒரு நகைவுக்கே சொல்லப் பட்டது.

    //கணக்கில் வராத காமிக்ஸ்'கள் உள்ளன. அவற்றை இடலாமா?// தாராளமாக இடுங்கள் ஐயா. என்னிடம் என் உத்தரவு வாங்குகிறீர்கள்?

    //ஆறாம் ஆண்டு விழா வாழ்த்துக்கள்// நன்றி.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  20. Hello BN_USA,
    There is one Extension tool avilable for Firefox Browser named 'downthemall'. Install it to ur firefox browser. this tool used to download all avilable images in webpage with single click. use it and download all images in single click and convert to cbr . You can install this tool from http://www.downthemall.net/

    ReplyDelete
  21. Dear friend Pula Sulaki, don't worry about it. I will try out our friend Limat's suggestion. Please continue the good work.

    >> There is one Extension tool avilable for Firefox Browser named 'downthemall'.

    Thank you Limat. I will try this.

    The English versions of this comic series was called "Tarzan : Apornas Son". The quality of the stories in English was very good. There were two stories per issue. If I remember correctly, the issue that Mr. Sulaki has posted here had a second story where Tarzan is kidnapped to some eastern european country and hunted by a dracula like character and his zombies. The illustrations are a perfect imitation of the art by the incomparable Russ Manning, one of the all time great comic illustrators. The art in this story looks so exactly like Manning's that I suspect it could be one of the Manning Sundays.

    ReplyDelete
  22. நண்பர் புலா சுலாகி,

    அருமையான பதிவு. அற்புதமான ஸ்கான்'கள்.

    தொடரட்டும் உங்கள் அதிரடி.

    இந்த புத்தகத்தின் இரண்டாவது கதை எங்கே?

    அட்டை படத்தை போடக் காணோம்?

    அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாமோ?

    ReplyDelete
  23. Thanks for your post. Very much like it

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin