
ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற இந்த வரிசையை நான் ஆரம்பத்தில் இருந்தே ரசித்தேன்.அதற்கு காரணம் ஆரம்ப கால முத்து காமிக்ஸில் இதனைப் போலவே நம்பினால் நம்புங்கள் என்று ஒரு பகுதி வந்து என்னை அசத்தும். அதுவும் முல்லை தங்கராசன் அவர்கள் ஒவ்வொரு புதிர் போன்ற கேள்வியை வெளியிட்டு விட்டு அந்த செய்தி ஆம், இல்லை என்று இரண்டு விடைகளை அளித்து இருப்பார். புத்தகத்தின் கடைசீ பக்கத்தில் விடை இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் விடை இருந்த பக்கம் கிழிந்து விட்டதால் மனிதனை கொல்லும் சுறாக்கள் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் வேறு ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.
ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் |
நண்பர் விஸ்வா அவர்கள் காமிக்ஸ் கதைகளில் வந்த விளம்பரங்களை பற்றி பதிவிட்டு நம்மில் பலரையும் விளம்பரங்களை பற்றியும் யோசிக்க வைத்து விட்டார். இதோ இந்த இதழில் வந்த ஏழு விளம்பரங்களில் எனக்கு பிடித்த ஒன்று. பின்னர் இந்த கருத்தை மையமாக கொண்டே அனு கழகம் என்று ஒரு தொடர் பூந்தளிர் இதழில் ஆரம்பிக்கப் பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதோ ரங்கு என்று ஒரு "ஒரு பக்க தொடர்". இந்த ஓவியர் செஹாப் தான் வழமையாக அந்த காலகட்டங்களில் இந்திரஜால் இதழின் அட்டைப் படங்களை வரைவார். சில நேரங்களில் அக்பர் பீர்பால் கதைகளுக்கும் இவர் வரைவார். நன்றாக இருக்கும்.
இதோ அடுத்து இடப் போகும் புத்தகத்தின் அட்டைப் படம்:
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.