Saturday, May 30, 2009

வேதாளர் - வைரத்தின் நிழல் : முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். தவிர்க்க இயலாத சில நிர்பந்தங்களால் என்னால் கடந்த ஒரு மாதமாக பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும்.
அந்த குறையை போக்க இதோ அடுத்து வரப் போகும் கதைக்கான ஒரு முன்னோட்டமும், வழமையாக நான் ஸ்கான் செய்யாத சில பல்சுவை பகுதிகளும் இந்த பதிவில் இடம் பெற்றுள்ளன. இந்த மாதிரியை தொடரலாமா என்பதை ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
நம்மில் பலருக்கு அக்பர்-பீர்பால் கதைகளை பிடிக்கும். (எனக்கு இன்ஸ்பெக்டர் ஈகிள் கதையில் வரும் பல்பீர் பெயரை ஈகிள் வேண்டுமென்றே தவறாக பீர்பால் என்று கூறி அவரை சீண்டும் கட்டங்கள் மிகவும் பிடிக்கும்). அதனால் இதோ ஒரு கிளாசிக் அக்பர்-பீர்பால் கதை.
 
பெரும்பாலும் இது போன்ற கதைகளை நம்மில் பலருக்கு சிறு வயதில் பிடித்து இருக்கும். இதனைப் போன்றே எனக்கு பிடித்த மற்றுமொரு சிறுகதை வரிசை நசீருத்தின் ஹோட்ஜா. பூந்தளிர் இதழில் நான் முதலில் தேடுவது இதைத்தான் (காக்கை காளியும், சுட்டிக் குரங்கு கபீசும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்டிரியோடைப்பிங் ஆகி விட்டது). ஆனால் அக்பர்-பீர்பால் கதைகள் என்றும் படிக்க இனியவை என்பது எனது கருத்து.
 

அக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 1

B1

அக்பர் - பீர்பால் கதை - நட்ச்சத்திர நகைச்சுவை - சொல்லும் வகை தான் முக்கியம் - என்ன சொல்கிறோம் என்பது அல்ல - பக்கம் 2

B2

 

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற இந்த வரிசையை நான் ஆரம்பத்தில் இருந்தே ரசித்தேன்.அதற்கு காரணம் ஆரம்ப கால முத்து காமிக்ஸில் இதனைப் போலவே நம்பினால் நம்புங்கள் என்று ஒரு பகுதி வந்து என்னை அசத்தும். அதுவும் முல்லை தங்கராசன் அவர்கள் ஒவ்வொரு புதிர் போன்ற கேள்வியை வெளியிட்டு விட்டு அந்த செய்தி ஆம், இல்லை என்று இரண்டு விடைகளை அளித்து இருப்பார். புத்தகத்தின் கடைசீ பக்கத்தில் விடை இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் விடை இருந்த பக்கம் கிழிந்து விட்டதால் மனிதனை கொல்லும் சுறாக்கள் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் வேறு ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

ripley

நண்பர் விஸ்வா அவர்கள் காமிக்ஸ் கதைகளில் வந்த விளம்பரங்களை பற்றி பதிவிட்டு நம்மில் பலரையும் விளம்பரங்களை பற்றியும் யோசிக்க வைத்து விட்டார். இதோ இந்த இதழில் வந்த ஏழு விளம்பரங்களில் எனக்கு பிடித்த ஒன்று. பின்னர் இந்த கருத்தை மையமாக கொண்டே அனு கழகம் என்று ஒரு தொடர் பூந்தளிர் இதழில் ஆரம்பிக்கப் பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

LIC AD

இதோ ரங்கு என்று ஒரு "ஒரு பக்க தொடர்". இந்த ஓவியர் செஹாப் தான் வழமையாக அந்த காலகட்டங்களில் இந்திரஜால் இதழின் அட்டைப் படங்களை வரைவார். சில நேரங்களில் அக்பர் பீர்பால் கதைகளுக்கும் இவர் வரைவார். நன்றாக இருக்கும்.

Rangu

இதோ அடுத்து இடப் போகும் புத்தகத்தின் அட்டைப் படம்:

00

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

22 comments:

  1. நண்பரே,

    பல்சுவை பகுதிகள் அருமை. குறிப்பாக பீர்பால் கதை. சிறிய ஆனால் சிறப்பான கதை.

    நம்பினால் நம்புங்கள் பகுதியை இபோது ரசிப்பது சற்று கடினமாகவிருந்தாலும் சிறு வயதில் கண்கள் விரிய இவற்றை படித்தது ஞாபகமிருக்கிறது.

    ரங்குவைப் பார்த்தால் கமல், ரஜினி நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பூதமாக வேடமேற்ற நடிகர் அசோகனின் சிகையலங்காரம் நினைவிற்கு வருகிறது.

    வைரத்தின் நிழல். என்ன ஒர் தலைப்பு. அந்த நிழல் பிரகாசமாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். அதற்கு செஹாப் அவர்கள் வரைந்துள்ள அட்டைப்படம் அபாரம்.

    டெவில் இது தான் தருணம் என்று ஒரு கிலோ மனித சதையில் வாய் வைத்துக் கொண்டு கொடுக்கும் போஸைப் பாருங்கள்.

    வேதாளரே சண்டை போடும் போது வைன் புட்டிகளை உடைக்காது சண்டை போடவும். உங்களைக் குறித்து எனக்கு ஏற்கனவே ஒர் சந்தேகம் உண்டு. நீங்கள் களவாணிகளிற்கு பின் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்க்கும் போது அது உறுதியாகி விட்டது.

    நண்பரே தயங்காது,உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் பல்சுவைப் பகுதிகளை.

    ReplyDelete
  2. நண்பர் க.கா அவர்களே,

    //வைரத்தின் நிழல். என்ன ஒர் தலைப்பு. அந்த நிழல் பிரகாசமாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். அதற்கு செஹாப் அவர்கள் வரைந்துள்ள அட்டைப்படம் அபாரம்.// ஆமாம். செஹாப் அட்டைப் படத்திலேயே தன்னுடைய கை வரிசையை காட்டி இருப்பார். கதையின் தலைப்பில் புள்ளிகளுக்கு பதிலாக வைரங்கள் இருப்பதை கவனித்தீர்களா?

    //உங்களைக் குறித்து எனக்கு ஏற்கனவே ஒர் சந்தேகம் உண்டு. நீங்கள் களவாணிகளிற்கு பின் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்க்கும் போது அது உறுதியாகி விட்டது.// நீங்கள் அவரை பார்த்து கேட்க விரும்பியது இதைத்தானே: அவனா நீ?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  3. நண்பரே, ஒரு சிறு திருத்தம். நான் கேட்க விரும்பிய கேள்வி, அவளா நீ?;)

    ReplyDelete
  4. நண்பர் ஷ. வி அவர்களே,

    //நண்பரே, ஒரு சிறு திருத்தம். நான் கேட்க விரும்பிய கேள்வி, அவளா நீ?;) //

    ஒன்றுமே புரிய வில்லையே?

    ஐயா சாமி, யாராவது இதற்க்கு கோனார் தமிழ் நோட்ஸ் போடுங்கள்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  5. நண்பரே இதற்கு கோனார் நோட்ஸ் போட்டால் நானும், நீங்களும் அதோ கதிதான் ;)

    ReplyDelete
  6. அருமையாக இருக்கிறது, பல்சுவை பதிவு... தொடர்ந்து கலக்குங்கள் சுலாகி.

    ÇómícólógÝ

    ReplyDelete
  7. good.waiting for phantom's story.

    ReplyDelete
  8. தோழர்,

    இப்படி முன்னோட்டம் இடுவதின் மூலம் மாதம் இரண்டு பதிவுகள் என்ற உங்கள் ஐடியாவை மாதம் நான்கு பதிவுகள் (வாரத்திற்கு ஒன்று) என்று கொண்டு வரலாம். நல்ல சிந்தனை. தொடர்ந்து பதிவிட்ட மாதிரியும் இருக்கும்.

    தொடருங்கள். ஆனால் சில கதைகளில் கதையே முப்பது பக்கங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

    ReplyDelete
  9. இந்த ரங்கு என்ற பாத்திரத்தின் முகம் உண்மையில் அசோகன் முஅகம் போலத்தான் உள்ளது. காதலர் சரியாகத்தான் கூறி உள்ளார்.

    உண்மையில் இந்த ரங்கு என்ற கதை வரிசை ஹென்றி என்ற கதையை மூலமாக கொண்டது. சில காலத்திருக்கு பிறகு ஹென்றி வரிசை கிடைக்காததால் ரங்கு என்று இவர்களே ஆரம்பித்து விட்டார்கள்.

    ReplyDelete
  10. இந்த ஜீவனும் அனுவும் என்ற LIC விளம்பரம் ஒரு பிரபலமான விளம்பரம் ஆகும்.

    இந்த வரிசையில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் வந்தன. அந்த காலத்தில் அப்படி ஒரே சீரியஸாக விளம்பரங்கள் வருவது பெரிய விஷயம்.

    ReplyDelete
  11. கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இன்று ஒரு துக்க நாள். மேல் விவரங்களுக்கு= http://ayyampalayam.blogspot.com/2009/06/blog-post.html

    ReplyDelete
  12. புலா சுலாகி அவர்களே,

    அருமையான கான்செப்ட். தொடருங்கள்.

    ஒரு சிறிய வேண்டுகோள் - உங்கள் வலை தளத்தை பற்றிய அந்த லிங்க்'இல //வலைதல முகப்பு// என்று தவறாக உள்ளது. மாற்றி விடவும்.

    ReplyDelete
  13. உங்கள் பதிவில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றிய முழு நீளப்பதிவு ஒன்றை நீங்கள் வெகு விரைவில் ஒரு பிரபலமான தமிழ் காமிக்ஸ் வலைப் பூவில் காணலாம்.

    ReplyDelete
  14. ஒலக காமிக்ஸ் ரசிகர்,

    வருகைக்கு நன்றி. வந்தவுடன் கடமையை காட்டி விட்டீர்களே?

    இப்போது மாற்றி விட்டேன். நன்றி.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  15. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //உங்கள் பதிவில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றிய முழு நீளப்பதிவு ஒன்றை நீங்கள் வெகு விரைவில் ஒரு பிரபலமான தமிழ் காமிக்ஸ் வலைப் பூவில் காணலாம்.//
    இந்த பதிவில் நான் இட்டு இருப்பவை

    அக்பர் பீர்பால் கதை = இதனை யாரும் முழு பதிவாக இடமாட்டார்கள்.

    நம்பினால் நம்புங்கள் = அப்படியே சென்ற பதிலை வழி மொழிகிறேன்.

    விளம்பரம் - விஷயம் = இதனைப் பற்றி அய்யம்பாலயத்தார் பூந்தளிரில் வந்த அணு கழகம் என்று பதிவிடுகிராரா என்ன?

    ரங்கு - ஹென்றி = முன்பு விச்சு கிச்சு பற்றி பதிவிட்ட விஸ்வா இப்போது இதனை பற்றி பதிவிடுகிராரா?

    ஒண்ணுமே புரியலையே? யாராவது சொல்லுங்கப்பா? இல்லை அதையும் அந்த பூங்காவனம் மேடம் தான் சொல்வார்களா?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  16. ஃபுல் டவுன்லோடு போடும் திரு.புலா சுலாகி அவர்களே,

    அனு கழகத்துக்கும் நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து! 80களில் இது போன்ற பல பொது அறிவு சமாச்சாரங்கள் அடங்கிய காமிக்ஸ்களும், விளம்பரங்களும் வருவது அரசியலில் சகஜம்!

    ஒலக காமிக்ஸ் ரசிகர் குறிப்பிட்டுள்ள பதிவு என்ன என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும்! அது வரை சஸ்பென்ஸ்!

    வேதாளரின் முழு சாகஸத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்! தொடர்ந்து இது போன்ற இடம் நிரப்பிகளையும் தவறாது வெளியிடுங்கள்! IT ADDS TO THE READING EXPERIENCE!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  17. அன்புடையீர்,

    கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  18. ஆஹா,

    தலைவர் அவர்கள் தானே வந்து கமெண்ட் இட்டது என்னுடைய பாக்கியம் (அதாவது அதிர்ஷ்டம் - மற்றபடி யார் அந்த பாக்கியம் என்று கேட்காதீர்கள்).

    //ஃபுல் டவுன்லோடு போடும் திரு.புலா சுலாகி அவர்களே,// இது என்ன பு'நாவுக்கு பு'நா என்று எதுகை மோனையுடன் ரைமிங் ஆக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் தலைவரே?

    //வேதாளரின் முழு சாகஸத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்! தொடர்ந்து இது போன்ற இடம் நிரப்பிகளையும் தவறாது வெளியிடுங்கள்! IT ADDS TO THE READING EXPERIENCE!// தலைவர் கோபிக்க கூடாது. தலைவர் அப்படியே எடிட்டர் விஜயனை போல எழுதுகிறார்?

    ஏனென்றால் அவர்தான் இப்படி பத்து தமிழ் வார்த்தைகளுக்கு மத்தியில் ரெண்டு ஆங்கில வார்த்தைகளை போட்டு எழுதுவார்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  19. தலைவர் அவர்களே,

    //அனு கழகத்துக்கும் நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து! 80களில் இது போன்ற பல பொது அறிவு சமாச்சாரங்கள் அடங்கிய காமிக்ஸ்களும், விளம்பரங்களும் வருவது அரசியலில் சகஜம்!// அது என்னுடைய கனெக்டிங் லிங்க் தானே தவிர இதனை அடிப்படையாக கொண்டே அது ஆரம்பிக்கப் பட்டது என்று நான் கூறவில்லை.

    அதாவது, ஒரு சிறிய குழு மூலம் (விளம்பரத்தில் இரண்டு பேர் - பூந்தளிர் கதையில் நான்கு பேர்) இயற்கையின் புதிர்களையும், விஞ்சான விந்தைகளையும் மாணவர்களுக்கு புரியும்படி எளிதில் விளக்குவதே இந்த தொடரின் நோக்கம்.

    இருந்தாலும் உங்கள் பின்னுட்டம் மூலம் அந்த சந்தேகத்தை சரி செய்ததற்கு நன்றி.

    இந்த வகை விளம்பரங்களை அட்வர்டோரியல் என்று கூறுவார்கள் (?).

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  20. புஷ்பவதி பூங்காவனம்,

    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

    எனக்கு ந்தேகம்: //எப்போதும் பத்தினி// இதற்க்கு என்ன அர்த்தம்?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  21. //இது என்ன பு'நாவுக்கு பு'நா என்று எதுகை மோனையுடன் ரைமிங் ஆக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் தலைவரே?//

    அடுக்கு மொழியில் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்தபடியாக அகில உலக அ.கொ.தீ.க. தலைவரான அடியேன் தான் என்பதை அகிலம் அறியும், அல்லவா!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin