காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.இரண்டு வாரங்களுக்கு ஒரு பதிவு என்ற என்னுடைய கொள்கைக்கு ஏற்ப இதோ அடுத்த பதிவு. இந்த பதிவில் ஒரு வித்தியாசமும் உள்ளது. அது என்ன என்பதை முடிவில் கண்டு கொள்ளுங்கள்.
காடு சம்பந்தப் பட்ட அருமையான பதிவை திரு கனவுகளின் காதலன் இங்கு இட்டுள்ளதால் நானும் இந்திரஜால் காமிக்ஸ் பற்றிய பதிவை இடும் என்னத்தை மாற்றிக் கொண்டு சென்ற மாதம் பதிவிட்ட வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றியே இந்த பதிவும் இட்டு உள்ளேன். வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள எங்கள் தலைவர் திரு முத்து விசிறி அவர்களின் பதிவுக்கான சுட்டி இதோ: முத்து விசிறி
வித்யார்த்தி மித்ரன் காமிக்ஸ் இரண்டு வரிசையில் வந்தது. ஒன்று மாயாவி மற்றது டார்ஜான். மாயாவி கதைகள் வெறும் கருப்பு வெள்ளையில் வந்தது. விலை ஒரு ருபாய் ஐம்பது காசுகள். வெளி வந்த ஆண்டு 1972 முதல் 1975 வரை. ஆனால் டார்ஜான் கதைகளோ இரு வண்ணத்தில் அதே விலையில் வந்தது.
என்னிடம் இருக்கும் இந்த டார்ஜான் புத்தகத்தில் இரண்டு டார்ஜான் கதைகள் இருக்கின்றன. முதல் கதை இந்த பதிவில் ஏற்கனவே இடப் பட்டதால் அடுத்து மீதம் உள்ள இரண்டாவது கதை இதோ:
முன்பு பதிவில் சொல்லி இருந்த படி இந்த பதிவில் வித்தியாசமான் ஒன்று என்னவெனில் இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பும் இங்கேயே கிடைக்கும் என்பதுதான். ஒவ்வொரு ஸ்கானையும் கிளிக் செய்தால் படம் பெரிதாகும்.
இந்த கதையை தமிழாக்கம் செய்தவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: ஐயா, தங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவரை நான் சந்திக்க வேண்டும்.Pirates என்றால் கில்லாடிகள் என்று உங்களுக்கு எந்த பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்?
ஆங்கில புத்தகத்திற்கும் தமிழ் புத்தகத்திற்கும் உள்ள விலை மற்றும் வண்ண வேறுபாடுகளை கவனியுங்கள்.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
அய்யா,
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு!
முழு புத்தகத்தையும் வெளியிட்டமைக்கு நன்றி.
ஆங்கில வடிவம் சுமார்தான். ஆனால் வசனங்கள் தேவலை.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
அட இன்னொரு டார்ஜான் அவதாரமா... கலக்குங்கள் சுலாகி.... இரண்டையும் ஒருங்கே படிக்கவும் ஆங்கில மூலத்துடன் ஒப்பிடவும் ஏதுவாக வெளியிட்டு விட்டீர்கள்... நன்றி....
ReplyDeleteபொறுமையாக படித்து விட்டு கருத்துகள் பதிகிறேன்.... இப்போதைக்கு மேலோட்டமாக பார்க்கையில்... ஆங்கில மூலத்தின் வசனங்கள், மற்றும் வண்ண சேர்ப்பு நன்றாகவே உள்ளது.... தமிழில் இன்றும் நன்றாக வெளியிட்டு இருக்கலாம்.
தொடருங்கள் வேட்டையை....
ÇómícólógÝ
நண்பரே,
ReplyDeleteமற்றும் ஒர் பொக்கிஷப் பதிவு, நான் ஒர் கில்லாடி என குரங்கு சொல்லும் கட்டம் தான் அட்டகாசம். அதையே ஆங்கிலத்தில் படித்த போது மொழி பெயர்ப்பாளரிற்கு ராதிகாவை வைத்து ஒர் முத்தம் தர வேண்டுமென தோன்றுகிறது.
இப் பொக்கிஷத்தை எங்கள் பார்வைக்கு வைத்ததிற்கு கோடி நன்றி. என் பதிவிற்கு சுட்டி அமைத்ததிற்கும் நன்றி நண்பரே.
உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிரடிகளை.
thanks. how about uploading in rapidshare or mediafiles?
ReplyDeleteHi Pula Sulaki,
ReplyDeleteThank you for another Tarazn comic with tamil & English. I am expecting your next Indrajal Post.
Loingly,
Lucky Limat
நல்ல முயற்சி. இந்த கதையை நான் படித்தது இல்லை. நன்றி.
ReplyDeleteவருகை தந்து கமெண்ட் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteபுலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html
ReplyDeleteலெட் த கும்மி ஸ்டார்ட்.
--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
dai pulasulaki.. unnaku vekaran da aapu
ReplyDelete//Anonymous said...
ReplyDeletedai pulasulaki.. unnaku vekaran da aapu//
நண்பரே,
ஆப்பு பெரியதாகி நீங்களே அதில் சிக்கிக்கொண்டு விட்டீர்களோ?