Friday, July 31, 2009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இதோ என்னுடைய அடுத்த முன்னோட்ட பதிவு ரெடி. இந்த முறை சற்று வித்தியாசமாக கதையையும் டீசர் போல அளித்து இருக்கிறேன். எப்படி என்பதை உங்களின் கருத்துக்கள் மூலமே அறிய வேண்டும்.

நம்முடைய அடுத்த காமிக்ஸ் பதிவின் ஹீரோ சற்று வித்தியாசமானவர். இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது, இந்த ஹீரோவின் ஆரம்ப கால கதைகளுக்கு தான். பின்னாளில் வந்த மொக்கை ராணி காமிக்ஸ் கதைகளுக்கோ அல்லது நாம் பதிவ்டப் போகும் சற்று சுமாரான இந்திரஜால் கதைகளுக்கோ ரசிகர்கள் குறைவுதான்.

உதாரணமாக ஆரம்ப கால புளுபெர்ரி (கேப்டன் டைகர்) கதைகள் அருமையாக இருக்கும். தற்போது வந்து கொண்டு இருக்கும் கதைகள் அமெரிக்க பாணி மொக்கை கதைகளே. அதனால் இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும். இதோ கதையின் முன்னோட்டம்:

கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் (நம்முடைய சாத்தான் அல்ல) அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர்.

Teaser 1

பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.

Teaser 2

கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன?

Teaser 3

பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.

Teaser 4

இனிமேல் என்ன நடக்கும்?

கார்த் கதி என்ன?

கார்த் பிழைப்பானா?

அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண நம்முடைய அடுத்த பதிவை பாருங்கள். இப்போது பல்சுவை பகுதியாக சில பல ஒரு பக்க / இரு பக்க கதைகளும், பக்க நிரப்பிகளும் உங்களின் பார்வைக்கு.

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 1

birbal 1

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 2

birbal 2

ரங்கு - ஒரு பக்க கதை - ஓவியர் ஸெஹாப் கைவண்ணத்தில்-அற்புத ஓவியரின் கைவண்ணம்

rangu

ஒரு பக்க நிரப்பி - ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

67 Ripley

ஒரு பக்க நிரப்பி - சொல்வதற்கு ஒன்றுமில்லை - ஹீத் கிளிப்

67 sa

ஒரு பக்க நிரப்பி - மணியன் - ஹென்றி

67 henri

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

22 comments:

  1. இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

    ReplyDelete
  2. நண்பரே மீண்டும் உங்கள் பதிவொன்றில் கருத்துப்பதிவதில் மகிழ்கிறேன்.

    டீசர் வடிவில் நீங்கள் தந்துள்ள கதைச்சுருக்கம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    நீங்கள் வழங்கியுள்ள பல்சுவைப் பக்கங்களும் சிறப்பாகவே உள்ளன.

    முரட்டுக்காளை கார்த்தின் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. super intro cum teaser post.

    keep it up.

    Shaji.

    ReplyDelete
  4. //இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்//

    :)

    ReplyDelete
  5. நணபர் புலா சுலாகி அவர்களே,

    இந்த முன்னோட்டப் பதிவு சூப்பர்.

    இதனைப் போலவே தொடரவும். அதுவும் அந்த கதை டீசர் அருமை.

    பதிவுக்காக காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  6. புலா சுலாகி,

    கார்த் கதைகளை நான் அதிகம் படித்தது இல்லை. அதனால் ஆவல் அதிகரித்து உள்ளது.

    அதுவும் நீங்கள் வேறு அவரை பற்றி இப்படி எல்லாம் கூறி உள்ளதால்//இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்// உண்மையில் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. அதனால் அவரை பற்றி மேலும் கூறவும்.

    ராணி காமிக்ஸ் கதைகளில் வந்த மொக்கை கதைகளை போல இருக்காது அல்லவா?

    ReplyDelete
  7. பல்சுவை பகுதிகள் அருமை.

    அதுவும் அந்த பீர்பால் கதைகள் சூப்பர். இந்த மாதிரியை தொடரவும்.

    வழக்கமாக முழு கதையை வெளியிடும்போது இந்த ஒரு பக்க நிரப்பிகளை வெளியிட்டால் அதனை அந்த அளவுக்கு சிரத்தை கொடுத்து படிக்க மாட்டோம். அதனால் இந்த முறை சிறந்த ஒன்றாகும். வாழ்த்துக்கள். தொடரவும்.

    ReplyDelete
  8. வசனங்கள் அருமை. அதுவும் அந்த ருபெயோ கூறும் வசனம் சூப்பர்: "சாத்தான் மாமாவிடம் கூறுவேன்"

    ReplyDelete
  9. நண்பர் புலா சுலாகி,

    அருமையான முன்னோட்டப் பதிவு. உங்களின் ஒவ்வொரு முன்னோட்டமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளது. இந்த முயற்சியை தொடருங்கள்.

    கார்த் கதைகள் (நான் படித்த வரையில்) மிகவும் சுமாராக இருக்கும். இதுவும் அப்படி தான் என்று நினைக்கிறேன்.


    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  10. புலா சுலாகி,

    //இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும்//

    தமிழில் பிராங்க் பெல்லாமி கதைகள் வந்து உள்ளனவா என்ன? என் அண்ணன் வந்து உள்ளதாக கூறுகிறான். அப்படி இருந்தால் அந்த கதையை கூறுங்கள் பிளீஸ்.


    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  11. eagerly waiting to know the answers to these:

    இனிமேல் என்ன நடக்கும்?

    கார்த் கதி என்ன?

    கார்த் பிழைப்பானா?

    அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

    பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

    அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

    ReplyDelete
  12. once the full post is done, i will also post the story in english download.

    ReplyDelete
  13. தமிழ் மொழிபெயர்ப்பு அருமையாக செய்திருக்கின்றார்கள்.
    தொடர்ந்தும் இது போன்ற பதிவுகளைஇடுங்கள்

    Mr. J Comics

    ReplyDelete
  14. excellent post. you are making us to starve for this story.

    very good concept. thanks for the effort.

    ReplyDelete
  15. புலா சுலாகி,
    பதிவுகளை இதே போல் முன்னொட்டம் போட்டே பதியுங்கள். அருமையாக உள்ளது. முழு பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    Lovingly,
    Limat
    Browse Comics

    ReplyDelete
  16. நண்பர் புலா சுலாகி அவர்களே,

    சைத்தான் மாமாவை நாங்கள் பார்ப்பது எப்போது? தூதுவர் எங்களை எப்போது காண வருவார்?

    ஆவலோடு காத்து இருக்கிறோம்.

    ReplyDelete
  17. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  18. நண்பரே,

    ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

    காமிக்ஸ் காதலன்
    பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
    யார் இந்த மரண அடி மல்லப்பா?

    ReplyDelete
  19. கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. நாளை பதிவு வெளிவரும்.

    தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  20. hai nanbare vazhga valamudan! ungal intha muyarchikku en nal vazhthukkal!

    ReplyDelete
  21. //நண்பர் புலா சுலாகி அவர்களே,

    சைத்தான் மாமாவை நாங்கள் பார்ப்பது எப்போது? தூதுவர் எங்களை எப்போது காண வருவார்?

    ஆவலோடு காத்து இருக்கிறோம்.//

    Repeattey.

    ReplyDelete
  22. புலா சுலாகி...

    என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ள முடியுமா ?

    அன்புடன்
    செந்தழல் ரவி
    ravi.antone@gmail.com

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin