
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இன்று என்னுடைய சிறுவயது விளையாட்டு தோழன், எனக்கு தனிமையின் பயம் தோன்றும்போதெல்லாம் எனக்கு தைரியமூட்டிய ஒரு தேவதன் (தேவதையின் ஆண்பால் இதுதானே?) திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள். இந்த விஷயம் மிகவும் தாமதமாக தெரிந்த காரணத்தினால் ஒரு சிறிய பதிவினை இப்போது இங்கே வழங்கப்ப்போகிறேன் (ஹுக்கும், முன்கூட்டியே தெரிந்தால் மட்டும் பல பதிவுகள் இட்டுவிடுவீரோ? என்று நீங்கள் முனகுவது எனக்கும் கேட்கிறது). மன்னிக்கவும்.
வாண்டுமாமா அவர்களை பற்றி சொல்ல நான் யார்? அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கு பல்லாயிரக்கணக்கான (தொலைந்து போன) சிறார்களில் நானும் ஒருவன். என்னுடைய சிறு வயது நினைவுகள் ஒரு கலைந்த கனவாக மாத்திரமே காட்சியளிக்கும் இந்த ஒரு அசாதாரண வாழ்வில், இப்போதும் அப்போதும் என்று பல பஞ்சுமிட்டாய் தருணங்களை அளித்தவர்தான் வாண்டுமாமா. இன்றைக்கும் பலே பாலுதான் எனக்கு பிடித்த கதை, (எனக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு சாரு என்றுதான் பெயரிடுவேன்), வீர விஜயன் தான் என்னுடைய சிறு வயது நாயகன். இந்த அருமையான தருணங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.
இன்றைய இணையதள பிளாக்கர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று இனம்காட்டிக்கொள்ள திடீரென்று ஏழெட்டு நாவல்களை எழுதுவது, தன்னுடைய எதிரியை திட்டுவதற்கென்றே தன்னுடைய இணையதள பக்கங்களை உபயோகப்படுத்துவது என்று தங்களின் மற்றும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் அப்பாவி மக்களின் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் வேளையில் ஒரு சிறுகதை என்றால் என்ன, அது எப்படி பின் நவீனத்துவ சிறுகதையாக மாறுகிறது என்பதற்கு இந்த ஆறுபக்க கதையே சிறந்த உதாரணம். முடிந்தால் இதுபோல எழுதப் பாருங்கள்.
ஒரு நாயகனை எதிர்நாயகனாக காட்டுவதும், எதிர் நாயகன் ஒருவனை நாயகனாக காட்டுவதும் ஒரு திறந்த கதை சொல்லிக்கு மட்டுமே சாத்தியம். அடுத்து வரும் கதையை கூர்ந்து படிக்கவும். படித்து முடித்தவுடன் இரண்டாவது முறை படியுங்கள். அப்படி இரண்டாவது முறை படிக்கும்போது கடைசி ஐந்து பத்திகளை களைந்துவிட்டு படியுங்கள் - கதையின் போக்கே வித்தியாசமாகவும், நாயகன் எதிர்நாயகனாகவும், எதிர் நாயகன் நாயகனாகவும் தெரியும். இந்த யுத்தி ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு மாத்திரமே வாய்க்கும். நிதானமாக படிக்க ஆரம்பியுங்கள்.
மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்- முழு பதிவுடன் வருகிறேன்.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteஅப்பாடா, ஒரு வழியாக பயங்கரவாதி டாக்டர் செவன், சிபி அண்ணன் மற்றும் கேப்டன் ஹெச்சை ஆகியோருக்கு முன்னால் ஒரு கமென்ட் போட்டாச்சு.
அருமையான பதிவு. அந்த கடைசி ட்விஸ்ட் சூப்பர்.
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள், ப்ளீஸ்.
நான் இரண்டாவது
ReplyDeleteபதிவை படத்து விட்டு மீண்டும் வருவேன்
அன்புடன்
ஹாஜா இஸ்மாயில்
கிங் விஸ்வாவின் வாண்டுமாமா பிறந்தநாள் பதிவிலிருந்து:
ReplyDelete//ஐயா, உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் நன்றியுடன் வணங்குகிறேன். நீங்கள் வாழும்காலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்படுகிறேன். திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை கலந்த வணக்கங்கள்.//
மீ ஆல்சோ ரிபீட்டு. இவருக்கு எப்படித்தான் நன்றி சொல்வது? நன்றி என்கிற வார்த்தைக்கு உணமியிலேயே ஒரு அர்த்தம் இருந்தால் அது இவருக்கு சொல்வதின் மூலம் முழுமையாகட்டும்.
அப்படியானால் ஆரம்பத்திலேயே அந்த பெண் அழுதது ஏன்? அந்த தீவில் உள்ள மாளிகையிலிருந்து அழுகுரல் கேட்டு தானே கப்பலை அங்கே செலுத்தினார்கள்
ReplyDelete//அப்படியானால் ஆரம்பத்திலேயே அந்த பெண் அழுதது ஏன்? அந்த தீவில் உள்ள மாளிகையிலிருந்து அழுகுரல் கேட்டு தானே கப்பலை அங்கே செலுத்தினார்கள்//
ReplyDeleteநல்லதொரு கேள்வி: லாஜிக்கலான பதில் என்னவென்றால் குழந்தை பிறந்தது முதலே அந்த நூறு கண் ராட்சதன் பயத்துடன் தான் இருக்கிறான். அவனுடைய குழந்தையையும், மனைவியையும் யாரோ அபகரித்து சென்றுவிடுவார்களோ என்ற பயம் அவனை ஆட்கொண்டு விடுகிறது. அதனால் அவர்கள் இருவரையும் அந்த அறையில் வைத்து மறைத்து வைத்திருக்கிறான். அப்போது அவனது மனைவி அந்த சோகத்தாலும், பயத்தாலும் அழுகிறாள் (என்று யூகிக்கலாம்).
excellent story. great narration. as mentioned, the ending of the story does really matter.
ReplyDeletehowever, as per Haja sir's comment, it is a logical question.
ReplyDeletefrom cyprus krieshna
ReplyDelete20 /06 /11 அன்று அனுப்பப்பட்ட கிங் விஸ்வா பற்றிய தகவலுக்கான பதில் பெறப்பட்டதால் அத் தகவலை மீள பெற்று கொள்கிறேன் . அத் தகவலை அனுப்பியதற்கு வருந்துகிறேன் .
நண்பரே தங்களிடம் உள்ள ராணி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ் புத்தகங்களில் சிலவற்றை முழு பதிவிட முடியுமா ? வாசித்து மகிழ்வதற்கு.
ReplyDelete( cyprus இல் இருந்து கிருஷ்ணா )
neengal ippadhivugalai pdf murayil upload seyya mudiyumaa
ReplyDelete