Tuesday, April 14, 2009

ஏஜண்ட் X-9 பிலிப் காரிகன் அயலான் அடாவடி

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.இரண்டு வாரங்களுக்கு ஒரு பதிவு என்ற என்னுடைய கொள்கைக்கு மாறாக இந்த முறை, பதிவிட்ட ஒரே வாரத்தில் மறுபடியும் பதிவிட வந்து இருக்கிறேன் என்றால் அதற்க்கு காரணம் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூ மன்னர் விஸ்வா'வின் பிறந்த நாள் இன்று வருவதால் தான். பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் நண்பரே. அது மட்டுமில்லாமல் இன்று தமிழர்களின் புத்தாண்டும் கூட (அரசாங்கங்கள் சட்டங்களை மாற்றுவதால் பழக்கங்கள் மாறாது). அது மட்டுமில்லாமல் இன்று இலங்கையில் வாழும் நமது சகோதரர்களுக்கும் கூட புத்தாண்டு தினமாகும்.

லயன் காமிக்ஸ் அடுத்த இதழ் காரிகனின் மாண்டவன் மீண்டான் என்று அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. புத்தகம் இந்த மாதம் வந்து விடும்,அடுத்த மாதம் வந்து விடும் என்று நானும் காத்து இருந்தேன். புத்தகம் வந்து விட்டால் அப்போது இந்த பதிவை இடலாம் என்று காத்து இருந்தே இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அதனால் கிங் விஸ்வா அவர்களின் பிறந்த நாள் பரிசாக இந்த பதிவு.

இந்திரஜால் காமிக்ஸ் இதக்களில் காரிகன் கதைகள் வர ஆரம்பித்தது குங்பு மன்னன் புருஸ் லீ'யின் கடைசி கதைக்கு பின்னர்.1982ல் காரிகனின் முதல் கதை வந்ததாக நினைவு. பத்திற்கும் மேற்பட்ட கதைகள். அவற்றில் இந்திரஜால் காமிக்ஸ்ல் வந்த அதே கதை பின்னர் லயன் காமிக்ஸ் இதழில் வந்தவை மொத்தம் நான்கு கதைகள். அவற்றில் இதுவும் ஒன்று.

கதையை படிக்க செல்லும் முன் ஒரு மன்னிப்பு கோரிக்கை: என்னிடம் இருக்கும் இந்திரஜால் காமிக்ஸ் இதழ்களிலேயே இந்த இதழ் தான் மோசமாக பாதிக்கப் பட்டு இருக்கும். தவறாக பைண்டிங் செய்யப்பட்டு, மழையில் நனைந்து, பக்கங்கள் மஞ்சளாகி என்று பல குறைகள். அதனால் ஸ்கான்கள் சற்றே தெளிவில்லாமல் இருக்கும். மன்னித்தருள்க.

 

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 1
01
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 2
02
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 3
03
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 4
04
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 5
05
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 6
06
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 7
07
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 8
08
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 9
09
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 10
10
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 11
11
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 12
12
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 13
13
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 14
14
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 15
15
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 16
16
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 17
17
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 18
18
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 19
19
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 20
20
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 21
21
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 22
22
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 23
23
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - ஏஜண்ட் X-9 - பிலிப் காரிகன் அயலான் அடாவடி பக்கம்: 24
24

எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த கதை இது என்பதால் மொழி பெயர்ப்பின் தரம் இன்னும் தாழ்ந்து இருக்கும் (அது சரி, இந்திரஜால் காமிக்ஸ்'ல் எப்போது மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது).

அதனால் கதையை சுருக்கமாக கூறி விடுகிறேன்: மலை உச்சியில் இருக்கும் ஒரு ஆராய்ச்சிக் குழு திடீரென்று காணமல் போகிறது. தன்னுடைய கணவனை காப்பாற்ற என்னும் ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் அந்த மலையின் அடிவாரத்தில் இருந்து அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து உதவியை எதிர்பார்கிறார்கள். ஓர் ஆண்டு ஆன பிறகும் அவள் கணவன் உயிருடன் இருப்பதாகவே அந்த பெண் நம்புகிறாள். அரசாங்கத்தால் அனுப்பப்படும் காரிகன் அவர்களின் நன்மதிப்பை கஷ்டப்பட்டு பெரும் தருணத்தில், கிடைக்கும் ஒரு எலும்புக்கூட்டை அவளின் கணவன் என்று நம்பும் அந்தப் பெண் காரிகன் வசப்படுகிறாள். அப்போது மலை உச்சியில் இருந்து அயல்கிரகவாசிகளால் அவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

விஞ்சான அறிவில் பல மடங்கு உயர்ந்த அவர்களின் தலைவன் மிர் அவர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்களே என்பதை கூறுகிறான். அவனது உதவியாளன் டுருவா'வை காரிகன் வெறுப்புக்கு உள்ளாக்கி நேரடி மோதலுக்கு வரவழைத்து கொல்கிறான்.அதனால் மிர் அவர்களை விட்டு செல்ல முடிவு எடுக்கிறான்.

காரிகனின் மதி நுட்பத்தால் கவரப்பட்ட மிர், அந்தப் பெண்ணின் கணவன் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தன்னக்கு தடையாக இருந்த டுருவா'வை காரிகன் நீக்கியதைப்போல தானும் காரிகனுக்கு தடையாக இருக்கும் அந்தப் பெண்ணின் கணவனை கொன்று காரிகனின் காதலுக்கு வழி செய்வதாக கூறுகிறான்.

ஆனால் காரிகன் அதனை மறுத்து அந்தப் பெண்ணை கணவனுடன் சேர்த்து விட்டு தனி ஆளாக நிற்க்கிறான். அதனால் மிர் காரிகனை தன்னுடன் செவ்வாய் கிரகத்துக்கு வருமாறு அழைத்தும் காரிகன் மறுத்து பூமியிலேயே  தங்கி விடுகிறான். மிர் தன் சகாக்களோடு திரும்பி செல்கிறான்.

ஏற்கனவே கூறியபடி லயன் காமிக்ஸ் இதழில் இந்த கதை என்பதாவது இதழில் வந்து உள்ளது. அந்த புத்தகத்தின் அட்டைப் படமும், முதல் பக்கமும் இதோ:

லயன் காமிக்ஸ் ஒரு பனிமலை பயங்கரம்=அயலான் அடாவடி இந்த முதல் பக்கத்தையும் படித்து பாருங்கள்
Lion Comics Same Corrigan Story Cover Lion Comics 1st Page

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

16 comments:

  1. நண்பர் புலா சுலாகி,

    புத்தாண்டு அன்று பிலிப் காரிகன் கதை நல்ல அன்பளிப்பாகும்.

    இந்திரஜால் காமிக்ஸில் கதையை இஷ்டத்திற்கு வெட்டியுள்ளார்கள் என்பது லயனின் முதல் பக்கத்தை பார்த்தவுடனேயே தெளிவாகிறது. நல்ல ஸ்கேன்கள்.

    ஷூவும் சாப்பிடெவேனே என்று பிலிப் கூறும் வசனம் பசியின் கொடுமையை சிரிக்க வைத்து புகட்டுகிறது.

    லின் பாத்திரம் 2 செக்கன்களிற்குகொருமுறை துனையை மாற்றிக் கொள்ளும் மனம் கொண்டவளாக சித்தரிக்கப்பட்டுள்ளது திருப்தி தருவதாக இல்லை.

    லின்னின் கணவன் உயிரோடு இருப்பதை அறிந்தவுடன் உடைந்து போகும் காரிகன் யதார்தம்.

    மர மனிதள்ளேயும் இதயம் - நல்ல வரிகள். மிர் தன் நண்பனை இழந்து விட்டதால், லின்னைப் போல் புதிய துனை ஒன்றை தேடுவதாகவும் கொள்ளலாம் இல்லையா.

    வழமை போன்றே பொக்கிஷப் பதிவு.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  2. வயக்கரா தாத்தாApril 14, 2009 at 7:55 PM

    என் ஆருயிரே லின், வயக்கரா தாத்தா எழுதுகிறேன். உன் அன்புக் கணவனிற்கு ஏதாவது ஒன்று என்றால் என் நெஞ்சு தாங்காது. காரிகன் கயவன். நம்பாதே. நான் உன் செல்லம் போடோவிற்கு பேன் பார்த்து விடுவேன். நான் இருக்க விரும்புவதெல்லாம் உன் அருகில் மட்டுமே. இடம் தருவாயா நிலவே.

    ReplyDelete
  3. தோழர் புலா சுலாகி,

    நல்ல கதை.

    முதலில் என்னுடைய நன்றிகள். என்னுடைய பிறந்த நாளை பற்றி குறிப்பிட்டு இருந்தமைக்கு.

    வழமை போல ஒரு நல்ல பதிவு. நீங்கள் என்ன சொன்னாலும், இவை நல்ல ஸ்கான்களே.

    //கிங் விஸ்வா அவர்களின் பிறந்த நாள் பரிசாக இந்த பதிவு.// மறுபடியும் நன்றிகள் உமக்கு உரித்தாகுக.

    //1982ல் காரிகனின் முதல் கதை வந்ததாக நினைவு// சரியே.

    //எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த கதை இது// இந்தக் கதை 1986ல் வந்தது. இந்தக் கதை வேதாளனின் மணப்பரிசு என்ற கதையில் இரண்டாவது கதையாக வந்தது. முதலில் வந்ததாக நினைவு இல்லை.

    உங்களின் கதை சுருக்கம் அருமை. ஆனால் அதே சமயம் நீங்கள் அந்த பேனல்களை எல்லாம் வெட்டி எடுத்து போடும் விமர்சனம் இல்லாதது குறையாக உள்ளது.

    தயவு செய்து அடுத்த பதிவில் இருந்து தொடரவும்.

    கதை சுருக்கம் + பேனல்களை எல்லாம் வெட்டி எடுத்து போடும் விமர்சனம் இரண்டும் இருந்தால் உங்கள் பதிவுகளை அடிக்க ஆளே கிடையாது.

    தொடருங்கள்.

    என்னிடம் உள்ள காரிகன் அட்டை படம் மோசமாக உள்ளது. இந்த வாரக் கடைசியில் இடப் போகும் காரிகனின் பதிவுக்கு இந்த அட்டைப் படத்தையே உபயோகப் படுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.

    நன்றி.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  4. காரிகன் கதைகள் அனைத்துமே சிறப்பானவை என்பது என்னுடைய கருத்து.

    மொழி பெயர்ப்பு மோசமாக இருந்தாலும் படிக்கும் சுவை குறையாது.

    அடுத்து என்ன கதை?

    ReplyDelete
  5. கில்லாடி கிரிகிரிApril 15, 2009 at 7:57 PM

    புலா சுலாகி,

    //ஆனால் காரிகன் அதனை மறுத்து அந்தப் பெண்ணை கணவனுடன் சேர்த்து விட்டு தனி ஆளாக நிற்க்கிறான்// பொழைக்க தெரியாத ஆளு. அந்தப் பய ஊனமுற்றவன். அவனால "அந்த" வேலை எல்லாம் சரியா செய்ய முடியுமா?


    கில்லாடி கிரிகிரி

    ReplyDelete
  6. அன்பரே புலா சுலாகி,
    விரைவில் வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சி . உங்கள் ஒவ்வொரு பதிவும் பாராட்டு தான் .ஸ்கான்கள் நன்றாகவே உள்ளன .லின்னின் கணவன் உயிரோடு வருவது நல்ல திருப்பம் . வழக்கம் போல் என் காமிக்ஸ் சேகரிப்பில் புலா சுலாகி அக்கௌண்டில் சேமித்து விட்டேன் .

    லக்கி லிமட் - Lucky Limat

    ReplyDelete
  7. லக்கி லிமட்,

    நன்றி உங்கள் கருத்துக்கு.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  8. From The Desk Of Rebel Ravi:

    Pula sulaki friend,

    you are doing an amazing job.kindly keep it up. now that you started story review also, it looks complete.

    thanks.

    Jai Ho.
    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  9. thanks for the full story. keep it up.

    try out other non existing publication stories such as parvathi chithira kathai, ashok metha comics etc.

    ReplyDelete
  10. by the way, why dont you upload them in easyshare, rapidshare etc so that we all can download it?

    ReplyDelete
  11. நண்பர் புலா சுலாகி

    அடுத்த பதிவு என்ன என்று எங்களை எங்க வைத்து விட்டீர்.

    தொடருங்கள். விரைவில்.

    ReplyDelete
  12. Dear Ravindhar,

    wait. as i have explained in my first post, i will be posting only 2 stories in a month. and it will be tough for me to do more than that.

    the next post is on sunday. am planning for another Non indrajal comics as well.

    thanks for your support.

    ReplyDelete
  13. நண்பர் புலா சுலாகி அவர்களே,

    நீங்கள் சொன்ன சன்டே கடந்து விட்டதே? பதிவு எங்கே?

    ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  14. //the next post is on sunday. am planning for another Non indrajal comics as well.//நீங்கள் சொன்ன சன்டே கடந்து விட்டதே? பதிவு எங்கே?

    நான் சண்டே என்று கூறினேனே ஒழிய இந்த சண்டே என்று கூற வில்லையே?

    நகைச்சுவையை மன்னிக்கவும். இந்த சண்டே பதிவு வலையேறும்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்

    ReplyDelete
  15. yow vayagra thatha & CO, MOKKAI comedy pottu kollathir......

    comedy nu nenaichikitu kadi podathir. kaduppa irukku

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin